ஸ்புட்னிக் - 5 கொரோனா தடுப்பூசி இலங்கைக்கு வருகிறது
கொவிட் 19 நோய் எதிர்ப்பு வேலைத்திட்டத்திற்கு தேவையான தடுப்பூசிகளை கொள்வனவு செய்யும் போது, அரச ஒளடதங்கள் கூட்டுத்தாபனத்தின் ஊடாக மாத்திரம் இறக்குமதி செய்வதற்கு அரசாங்கத்தினால் கொள்கை ரீதியிலான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த கூட்டுத்தானத்தின் தலைவர் வைத்தியர் பிரியந்த குணசேன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, உலகில் பாவணைக்கு வந்துள்ள 5 தடுப்பூசிகள் தொடர்பில் அரச ஒளடதங்கள் கூட்டுத்தாபன அவதானம் செலுத்தியுள்ளதுடன், ஒக்ஸ்போர்ட் செனகா கொவிசீல்ட் தடுப்பூசியை முதன்மை பட்டியலின் கீழ் சுகாதார மற்றும் பாதுகாப்பு தரப்பினருக்கும் செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் ஸ்புட்னிக் 5 தடுப்பூசி இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கான பிரதிநிதியாக காணப்படும் அரச ஒளடதங்கள் கூட்டுத்தாபனம் அதற்கான அனுமதியை ஒளடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையிடம் அண்மையில் முன்வைக்கப்பட்டது.
அதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றதும் உடனடியாக குறித்த தடுப்பூசி சுகாதார அமைச்சின் தேவைப்பாடுகளுக்கு அமைய, இறக்குமதி செய்ய முடியும் என அரச ஒளடதங்கள் கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது
Post a Comment