இலங்கையில் இதுவரையில் 354,352 பேருக்கு, கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது
இலங்கையினுள் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசி வேலைத்திட்டம் தொடர்பாக covid-19 பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
நேற்று முந்தினம் இலங்கையில் 508 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர், இவர்களில் 175 பேர் கொழும்பு மாவட்டத்திலிருந்து அடையாளம் காணப்பட்டவர்கள் ஆவர்.
மேலும் கம்பஹா மாவட்டத்தில் 77 பேரும், கண்டி மாவட்டத்தில் 41 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 38 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 28 பேரும், மாத்தளை மாவட்டத்தில் 26 பேரும், மாத்தறை, பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் தலா 13 பேர் வீதமும் நேற்றைய தினம் கொவிட் தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதேபோன்று அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 11 பேரும், காலி மாவட்டத்தில் 9 பேரும், குருநாகல் மாவட்டத்தில் 9 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 6 பேரும், மொனராகலை மாவட்டத்தில் 5 பேர் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 3 பேரும் நேற்று முந்தினம் அடையாளம் காணப்பட்டவர்களுள் அடங்குவர்.
அத்துடன், பொலன்நறுவை மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் தலா 3 பேர் வீதமும், அனுராதபுரம் மற்றும் புத்தளம் மாவட்டங்களில் தலா இரண்டு பேர் வீதமும், மட்டக்களப்பு மற்றும் மன்னார் மாவட்டங்களில் தலா ஒருவர் வீதமும் நேற்றைய தினம் தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், ஏனைய 28 பேரும் வெளிநாடுகளிலிருந்து வருகை சார்ந்தவர்களாவர்.
Post a Comment