Header Ads



23ம் திகதி, மத உரிமையை வென்றெடுப்பதற்கான போராட்டம்


- Mujibur Rahman Mp - 

கொரோனா தொற்று காரணமாக மரணிக்கும் உடல்களை அடக்கம் செய்வது சம்பந்தமாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விஷேட நிபுணர் குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை தற்போது ஊடகங்களில் வௌியாகியுள்ளன. அடக்கம் செய்தல் மற்றும் தகனம் செய்தல் ஆகிய இரண்டு பரிந்துரைகள் அந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளமை தற்போது தெரியவந்துள்ளது. அதன் அடிப்படையிலேயே அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்படும் என்று அண்மையில் பிரதமர் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். 

எனினும் அரசாங்கம் பலாத்காரமான முறையில் தகனம் செய்யும் முறையை மாத்திரமே கடைபிடித்து வருகின்றது. இந்த நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட்டு பிற மதத்தவர்களின் சமய உரிமைகளை பின்பற்றும் உரிமை அரசாங்கத்தினால் உறுதி செய்யப்பட வேண்டும். அதன் அடிப்படையில் எதிர்வரும் 23ம் திகதி, எமது மத உரிரைமயை வென்றெடுப்பதற்கான எமது போராட்டம் இடம்பெறவுள்ளது. இதன்போது, விஷேட நிபுணர் குழுவினால் பரிந்துரை செய்யப்பட்டுள்ள முன்மொழிவுகளை அமுல்படுத்துமாறு கூறி அரசாங்கத்திற்கு எமது எதிர்ப்பை வௌிக்காட்டுவதற்காக ஒன்றிணைவோம்.

No comments

Powered by Blogger.