Header Ads



22 ஆயிரத்து 500 இலங்கையர்களை அழைத்துவர நடவடிக்கை


வெளிநாடுகளில் தங்கியிருக்கும் இலங்கைப் பணியாளர்களை நாட்டிற்கு அழைத்து வரும் வேலைத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 

இதன் கீழ் குவைத் நாட்டில் தங்கியிருக்கும் சுமார் 5 ஆயிரம் பணியாளர்களை இலவசமாக நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருப்பதாக ராஜாங்க அமைசசர் பிரியங்கர ஜயரத்ன தெரிவித்துள்ளார். 

இந்தத் திட்டத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் தங்கியிருப்பவர்களை அழைத்து வருவதற்கு முன்னுரிமை வழங்குவதாக ராஜாங்க அமைசசர் பிரியங்கர ஜயரத்ன தெரிவித்திருக்கின்றார். 

இதன் பிரகாரம் மத்திய கிழக்கில் தங்கியிருக்கும் சுமார் 22 ஆயிரத்து 500 பேரை அழைத்து வரப்படவிருப்பதாகவும் ராஜாங்க அமைசசர் பிரியங்கர ஜயரத்ன மேலும் தெரிவித்துள்ளார். 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

1 comment:

  1. இதனால் அரச மாபியாக்களுக்கு எத்தனை கோடி கிடைக்கின்றது என்ற விடயம் மாத்திரம் சரியாகக் கணக்குப்பார்த்து உரிய பெரியவர்களின் கமிசன் அளவு மாத்திரம் தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் கசிகின்றது.

    ReplyDelete

Powered by Blogger.