சவூதியினால் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள 20 நாடுகளின் விபரம்
கொவிட்19 பரவலை கட்டுப்படுத்தும் முகமாக 20 நாடுகளில் இருந்து தமது நாட்டு பிரஜைகள் தவிர்ந்த ஏனையோர் நாட்டுக்குள் வருவதற்கு சவுதி அரேபியா தடை விதித்துள்ளது.
தூதுவர்கள், சுகாதார பயிற்சியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பம் சார்ந்தவர்களும் அடங்குவதாக அந்த நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சினை மேற்கோள்காட்டி சவுதி அரேபிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஆர்ஜன்டீனா,
ஐக்கிய அரபு இராச்சியம்,
ஜேர்மனி,
அமெரிக்கா,
இந்தோனேசியா,
அயர்லாந்து,
இத்தாலி,
பாகிஸ்தான்,
பிரேஸில்,
போர்த்துக்கல்,
பிரித்தானியா,
துருக்கி,
தென்னாப்பிரிக்கா,
சுவிடன்,
சுவிட்ஸர்லாந்து,
பிரான்ஸ்,
லெபனான்,
எகிப்து,
இந்தியா,
ஜப்பான்
ஆகிய நாடுகளுக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று இரவு 9 மணி முதல் இந்த அமுலுக்கு வருவதாக சவுதி அரேபிய ஊடகம் அறிவித்துள்ளது.
அத்துடன் குறித்த 20 நாடுகளின் ஊடாக வேறுநாடுகளுக்கு கடந்த 14 நாட்களுக்குள் பயணித்தவர்களுக்கும் சவுதி அரேபியாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment