Header Ads



பஸ்ஸில் சைனீஸ் ரோல்ஸால், நகைகளை இழந்த 2 பெண்கள்


அநுராதபுரத்திலிருந்து கொழும்பு வந்த பஸ்ஸில் பயணித்த 2 பெண்கள் சைனீஸ் ரோல்ஸை உண்ட பின்னர், தமது நகைகளைப் பறிகொடுத்த சம்பவம் ஒன்று இரண்டு நாள்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து தெரிய வருவதாவது,

குறித்த இரு பெண்களும் அநுராதபுரத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த போது, அருகிலிருந்த ஆசனத்தில் அமர்ந்திருந்த இளைஞர் ஒருவருடன் நடபுறவவாடியுள்ளனர்.

இந்த நட்புறவாடலை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட குறித்த இளைஞன் அந்தப் பெண்களுக்கு 2 சைனீஸ் ரோல்ஸை சாப்பிட கொடுத்துள்ளார்.

இதை சாப்பிட்ட அந்தப் பெண்கள் இருவரும் மயக்கமடைந்த பின்னர், அவர்களிடமிருந்து 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கநகைகளுடன் இளைஞர் தலைமறைவாகியுள்ளார்.

மயக்கமடைந்த இரண்டு பெண்களும் சாலியபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதடன், இவர்களிடம் மேலதிக தகவல்களைப் பெறுவதற்காக பொலிஸார் 2 நாள்களாக எடுத்து வரும் முயற்சி பலனளிக்கவில்லை என்றும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தமக்கு என்ன நடந்தது என்பது குறித்து இன்னும் தெளிவான நிலைக்கு வரவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். TM

No comments

Powered by Blogger.