Header Ads



1,380 கிலோ சமையல் மஞ்சள் தீயிட்டு அழிப்பு - 50 இலட்சம் பெறுமதியானது


கற்பிட்டி அம்மாதோட்டம் கடற்கரை பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், புத்தளம் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்ட பெருமளவிலான மஞ்சள் கற்பிட்டியில் தீயிட்டு அழிக்கப்பட்டது.

குறித்த மஞ்சள் சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து கடல் வழியாக இந்நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சுமார் 1,380 கிலோவும் 500 கிராமும் எடையுடைய சமையல் மஞ்சளே இவ்வாறு தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளது.

இதன் பெறுமதி சுமார் 50 இலட்சத்துக்கும் அதிகமாகும் என்பதோடு தற்பொதைய சந்தைப் பெறுமதி 96 இலட்சம் ரூபாய் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

(ரஸீன் ரஸ்மின்)


8 comments:

  1. புத்திசாலித்தனமான முறையில் நடத்திருந்தால் இவைகளை அராசாங்கத்தின் பொது சொத்தாக பிரகடனம் செய்து மக்களுக்கு இந்த மஞ்சளை சத்தோச கடைகளில் விற்பனை செய்து மக்களின் கஸ்டங்களை நீக்க முடிந்திருக்கும்! அராசாங்கத்திற்கு பணமும் கிடைத்திருக்கும்!

    ReplyDelete
  2. சுத்தமான மஞ்சளா ௮ல்லது சாணம் கலந்ததா யாருக்குத் தெரியும்!? எரித்ததே நல்லது!

    ReplyDelete
  3. could have been utilized in a useful manner ...

    destroying kanja and heroine acceptable but not an useful product like this. Those who violate the rules could have been punished but not these useful products.

    Why this much anger with this product ?

    ReplyDelete
  4. சாணம் கலக்க இது மஞ்சள் தூள் அல்ல. முழு மஞ்சள் 

    ReplyDelete
  5. nazeem, ur argument is baseless.

    ReplyDelete
  6. இப்படியும் முட்டாழ்கள் இருப்பார்களா?

    ReplyDelete
  7. Ada erumaigalaa??? arasa udamayaakki.... illaatha ealaigalukku kudungalenda eeenappiravigala??? Itha paatta unga arasaangamum ipdittaan irukkumo???!!!!

    ReplyDelete
  8. Stupidity...
    You are right brother Mohamed.

    ReplyDelete

Powered by Blogger.