Header Ads



கொரோனா அறிகுறி தென்படாதவர்ளை, தனிமைப்படுத்தல் 10 நாட்களாக குறைப்பு


நோய் அறிகுறிகள் தென்படாத கொவிட் தொற்றாளர்களை தனிமைப்படுத்தல் சிகிச்சை மத்திய நிலையத்தில் தடுத்து வைக்கும் கால எல்லை 14 நாட்களில் இருந்து 10 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. 

கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நபரின் சளி மாதிரி பெற்றுக் கொள்ளப்பட்ட தினத்தில் இருந்து 10 நாட்களுக்கு இவ்வாறு கணக்கிடப்படவுள்ளது. 

எவ்வாறாயினும், தொற்றாளர்களில் சிலர் 6 நாட்களின் பின்னரே தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. 

அதன்படி, தனிமைப்படுத்தல் நிலையங்களில் அவர்கள் 04 நாட்கள் மாத்திரமே தடுத்து வைக்கப்படுவர் என தெரிவிக்கப்படுகிறது. 

எவ்வாறாயினும், தொற்றாளரிடம் இருந்து வைரஸ் பரவக்கூடும் என நம்பப்படும் 10 நாட்கள் மாத்திரம் அவர்களை சிகிச்சை மத்திய நிலையத்தில் தடுத்து வைக்கவும், மீதி 4 நாட்களுக்கு அவர்களை வீட்டினுள் தனிமைப்படுத்தி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் பிரதானி விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.