ஐக்கிய மக்கள் கூட்டமைப்பொன்றை உருவாக்க UNP உள்ளிட்ட கட்சிகளை தம்முடன் இணையுமாறு அழைப்பு
ஐக்கிய மக்கள் கூட்டமைப்பொன்றை உருவாக்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட ஏனைய கட்சிகளை தம்முடன் இணைந்துகொள்ளுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமையினை மாற்றியமைப்பதற்கு அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டுமெனவும், இதனால் - அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளுக்கு தாம் அழைப்பு விடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தற்போதைய நிலையில் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டுமெனவும், அதற்காக ஒவ்வொரு தனிநபரினதும் ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Post a Comment