UNP யின் உயர்பீடத்தில், முஸ்லிம்களுக்கு எந்த இடமும் இல்லை
ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்கே பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு இன்று (13) காலை கூடியபோது இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் துணை தலைவராக அகிலவிராஜ் காரியவசம் நியமிக்கப்பட்டுள்ளதுடன், ருவன் விஜேவர்தன தொடர்ந்தும் பிரதி தலைவராக உள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளராக வஜிர அபேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் மூத்த துணைத் தலைவர்களாக டி.எம். சுவாமிநாதனும் அர்ஜுன ரணதுங்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தயா கமகே, சாகலா ரத்நாயக்க, சுனேத்ரா ரணசிங்க ஆகியோர் உப தலைவர்களாக பணியாற்றவுள்ளார்கள்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளராக நவீன் திசாநாயக்க செயற்படவுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று காலை செயற்குழு கூடியது.
Is there any Muslim-head in the party???? if not then how they appoint???
ReplyDeleteGood. The UNP is showing its true colours. It is NEITHER United NOR National and will soon Cease to be a Party. Ranil will FINISH the Party before he retires.
ReplyDeleteIt seems that A.S.M. Misbah has been appointed as the Treasurer of UNP.
ReplyDelete