Header Ads



சேருவிலயில் அதிகளவு தங்கம், என்ற விடயம் அதிகளவு மிகைப்படுத்தப்பட்டுள்ளது - Dr அனில்


திருகோணமலை சேருவில பகுதியில் பாரிய தங்க சுரங்கம் இருப்பதாக சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட நிலையில், குறித்த விடயம் மிகவும் “மிகைப்படுத்தப்பட்டுள்ளதாக” தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் செயலாளர் வைத்தியர் அனில் ஜசிங்க இதனை தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு நேற்று கருத்து வெளியிட்ட அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சாதாரண மக்கள் மட்டுமல்ல, அறிவியலைப் பற்றிய முழுமையான புரிதல் உள்ளவர்களும் இந்த விடயங்களையும் பெரிதுபடுத்துகிறார்கள்" என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

எவ்வாறாயினும், சுற்றுச்சூழல் அமைச்சகம் மட்டுமே இதுபோன்ற கண்டுபிடிப்புகள் குறித்து மக்களுக்கு அறிவிக்க முடியும் என்று சுற்றுச்சூழல் செயலாளர் வலியுறுத்தினார்.

இதேவேளை, இலங்கையின் பல பகுதிகளில் தங்கச் சுரங்கம் உள்ளதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை மூத்த பேராசிரியர் அத்துல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

சேருவில பிரதேசத்தில் இரும்பு அமைந்துள்ள இடங்களில் மூன்று, நான்கு கிலோ மீற்றர் தூரத்தில் தங்கம் அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சேருவில பிரதேசத்திற்கு அருகில் தங்கம் உள்ளமை பேராதனை பல்கலைக்கழகத்தினால் கண்டுபிடிக்க முடிந்துள்ளது.

இவ்வாறான பின்னணியிலேயே சுற்றுச்சூழல் செயலாளர் வைத்தியர் அனில் ஜசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. இதற்கு මණ්ඩලේ කචල් ௮ன்று சிங்களத்தில் சொல்வார்கள்❗🙄

    ReplyDelete

Powered by Blogger.