ஹக்கீமுடன் பழகியவர்கள் CCTV மூலம் தேடல் - 10 பேர் பாராளுமன்ற உறுப்பினர்கள்
அவர்களுள் 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 2 பாராளுமன்ற ஊழியர்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்கள் தொடர்பில் மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
2
கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீமுடன் நெருங்கி பழகியவர்கள் தொடர்பில் தேடப்பட்டு வருகின்றது.
ரவூப் ஹக்கீம் கடந்த 5 ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்துக்கொண்டதாக பாராளுமன்ற பிரதம வேதியர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
அதனபடி ஹக்கிமுடன் நெருங்கி பழகியவர்களை அடையாளம் கண்டு அவர்களை சுய தனிடைப்படுத்தலுக்கு உட்படுத்த சி.சி.டி.வி காட்சிகளை பார்வையிட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
சுகாதார பிரிவினரின் ஒத்துழைப்பு கிடைக்கும் பட்சத்தில் பாராளுமன்ற நிர்வாக அதிகாரிகளை அடுத்த வாரமளவில் பி.சீ.ஆர் பரிசோதனைக்கும் தொழினுட்ப ரீதியான பரிசோதனைகளுக்கும் உட்படுத்தவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
தான் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளாதாகவும், எனவே தன்னுடன் கடந்த 10 நாட்களில் நெருங்கி பழகியவகள் அனைவரும் சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய செயற்படுமாறு ரவூப் ஹக்கீம் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ரவூப் ஹக்கீமுடன் சேர்த்து இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவும் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
Post a Comment