விபத்துக்குள்ளான விமானத்தில் ஏறியவுடன், தாய் தனது குழந்தைகளுடன் பதிவிட்ட நெஞ்சை உருக்கும் புகைப்படம்
Jakarta-விலிருந்து 50-க்கும் மேற்பட்டவர்களுடன் Pontianak புறப்பட்ட Sriwijaya Air flight SJ182 போயிங் விமானம், சிறிது நேரத்திலேயே விமான போக்குவரத்து அதிகாரிகளுடனான தொடர்பை இழந்து ரேடாரிலிருந்து மாயமானது.
தற்போது விமானத்தின் சிதறிய பாகங்கள் துண்டு துண்டுகளாக கடலுக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் பயணித்த 46 பெரியவர்கள், ஏழு குழந்தைகள், மூன்று கைக்குழந்தைகள் மற்றும் ஆறு குழு உறுப்பினர்களின் நிலை குறித்த தகவல் ஏதும் தற்போது வரை வெளியாகவில்லை.
ஆனால், தேடுதலின் போது சில சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண உறவினர்கள், விமானத்தில் பயணித்த பயணிகளின் இரத்த மாதிரிகள் மற்றும் டிஎன்ஏ-வை சமர்பிக்க வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்நிலையில், Ratih Windania என்ற பெண், விபத்துக்குள்ளான SJ182 விமானத்தில் ஏறியவுடன் தனது இரண்டு குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்து, ‘Bye bye family. நாங்கள் இப்போது வீட்டிற்கு செல்கிறோம்.’ என கடைசியாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
புகைப்படத்தில் இரண்டு குழந்தைகளும் அழகாக சிரிப்பது காண்போரின் நெஞ்சை உருக வைத்துள்ளது.
Ratih Windania-யின் சகோதரர் Irfansyah Riyanto குடும்பத்தின் படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, ‘எங்களுக்காக பிராத்தியுங்கள்.’ என பதிவிட்டுள்ளார்.
Pontianak-ல் வசிக்கும் Ratih Windania குழந்தைகளுடன் விடுமுறை கொண்டாட தனது வீட்டிற்கு வந்ததாகவும், 3 வாரங்களுக்கு பின் Pontianak திரும்ப அவர் குழந்தைகளுடன் குறித்த விமானத்தில் புறப்பட்டதாக சகோதரர் Irfansyah Riyanto வேதனை தெரிவித்துள்ளார்.
குறித்த விமானத்தில், தனது சகோதரி Ratih Windania, அவரின் இரண்டு குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் என ஐந்த பேர் சென்றதாக Irfansyah Riyanto தெரிவித்துள்ளார்.
அவர்கள் குறித்த நல்ல தகவல் வரும் என காத்திருப்பதாக Irfansyah Riyanto தெரிவித்துள்ளார்.
Post a Comment