Header Ads



மக்கள் ஒன்றுகூடும் இடங்களில் துரித, கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கு தீர்மானம்


 நாட்டில் மக்கள் அதிகமாக ஒன்றுகூடும் இடங்களில் கொரோனா தொற்றுக்கான துரித பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பல்பொருள் அங்காடிகள், மீன் சந்தைகள் உள்ளிட்ட அதிகளவானோர் செல்லக்கூடிய இடங்களில் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கு மேலதிகமாக கொழும்பு மாவட்டத்திலிருந்து வெளியேறும் தரப்பினருக்காக 11 இடங்களில் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ளும் திட்டம் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த மாதத்தில் ஏதேனும் ஒருவகை கொரோனா தடுப்பூசி நாட்டுக்கு கொண்டுவரப்படும் எனவும் இராணுவத் தளபதி இதன்போது கூறினார்.

கொரோனா தடுப்பூசியை ஏற்றுவதற்கான நடவடிக்கைகள் இராணுவத்தினரின் தலைமையில் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் இராணுவத் தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

1 comment:

Powered by Blogger.