தமிழில் கவிதை எழுதி சிறைவாசம் அனுபவிக்கும் முஸ்லிம், இளைஞர் பற்றி சிங்களப் பத்திரிகை வெளியிட்டுள்ள முக்கிய தகவல்கள்
தரிந்து உடுவரகெதர – அனித்தா பத்திரிகை
“இந்தப் புத்தகத்தில் தீவிரவாதக் கருத்துக்கள் உள்ளது” என 2020 ஜுன் 17ம் திகதி நவரசம் கவிதைப் புத்தகம் தொடர்பாக நீதிமன்றத்தில் கருத்துத் தெரிவிக்கும்போத குற்றப் புலானய்வுத் தினைக்களத்தின் பொலிஸ் அதிகாரி சுரங்க தெரிவித்திருந்தார். இதன் பிறகு தீவிரவாதக் கருத்துக்களை எழுதி மாணவர்கள் மத்தியில் பரப்பிய ஆசிரியர் என்ற தலைப்பில் ஹிரு, தெரண உட்பட பல ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டி ருந்தது.
இந்த செய்தி மூலம் புத்தகங்களை எழுதி மாணவர்களை தீவிரவாதத்தின் பக்கம் திருப்பிய ஆசிரியர் தொடர்பான பயங்கர தோற்றமொன்று ஏற்படுத்தப்பட்டது. தமிழ் மொழி தெரியாத இந்தப் புத்தகத்தை வாசிக் காதவர்கள் ஊடகங்கள் மூலம் காட்டப்பட்ட இந்தப் பயங்கர தோற்றத்தை நம்பியிருப்பார் கள் என்பதில் சந்தேகம் இல்லை.
2018 மே மாதம் 15ம் திகதி இளைஞன் ஒருவர் தனது புதிய கவிதைப் புத்தக வெளி யீட்டு நிகழ்ச்சியொன்றினை ஏற்பாடு செய்தி ருந்தார். குறித்த அந்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி எமது நாட்டின் தேசிய கீதத்துட னேயே ஆரம்பிக்கப்பட்டது. அது ‘நவரசம்’ எனும் தமிழ் மொழியில் எழுதப்பட்ட கவி தைப் புத்தகமாகும். இப்புத்தகம் இரகசிய மாக எழுதப்பட்ட புத்தகமொன்றன்று, பகி ரங்கமாக வெளியிடப்பட்ட 125 பக்கங் களைக் கொண்ட புத்தகமாகும். புத்தகத் தின் பதிவு இல. ஐகுஆN:978-955-7432-00-7 ஆகும். தடுத்து வைக்கப்பட்டுள்ளவர் இப் புத்தகத்தின் ஆசிரியராவார்.
தீவிரவாதம் இல்லை.
இப்புத்தகம் இது வரை நீதிமன்றத் தேவைக்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட மொழி பெயர்ப்பாளர்களால் இரு முறை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மேலதிகமாக நாமும் எமக்குத் தெரிந்த மொழி அறிவின் அடிப் படையில் புத்தகத்தை வாசித்துப் பார்த்தோம். தமிழ் மொழி தெரிந்தவர்களிடம் கவி தைகளின் அர்த்தம் தொடர்பாக கேட்டுப் பார்த்தோம்.
இதில் பொலிஸ் அதிகாரி நீதிமன்றத்தில் கூறியவாரான தீவிரவாதக் கருத்துக்கள் காணப்படவில்லை. மாறாக தீவிரவாதத்திற்கு எதிரான கருத்துக்களே காணப்பட்டது.
இப்புத்தகம் தொடர்பாக பேராதனை பல் கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் அவர்கள் இவ்வாறு எழுதி யுள்ளார்.
“45 கவிதைகளைக் கொண்ட இப் புத்த கத்தை நான் வாசித்தேன். தீவிரவாதம் தொடர் பாக எந்த விடயத்தையும் நான் இதில் காண வில்லை. மாறாக தீவிரவாத்திற்கும் வன் முறைக்கும் யுத்தத்திற்கும் எதிரான விடயங் களையே இதில் நான் கண்டேன். இக் கவி ஞன் மத ஒழுக்கம், மனிதநேயம், அன்பு மற்றும் சமாதான வாழ்க்கை என்பவை தொடர்பாகவே எழுதியிருந்தார். இவ்வாறான கருத்துக்களை தீவிரவாதம் எனக் கருதுவது ஆச்சர்யமானதாகும். இப்புத்தகத்தில் சில கவிதைகளில் (வன்முறைக்கு எதிரான கவி தைகளில்) சித்திரங்களில் ஆயுதம் தரித்த நபர்கள் காணப்படுகின்றமையை தமிழ் மொழி தெரியாத அதிகாரிகள் இது தீவிர வாதத்தை பரப்பும் புத்தகம் எனக் கருதி யிருப்பார்கள்.”
இதன் பின்னணி
இவ்விடயமானது சட்டத்தரணி ஹிஸ்புல் லாவின் கைதுடன் தொடர்பானது. நாம் இங்கு அவர் தொடர்பான விடயத்தை பேசவில்லை. சுருக்கமாகச் சொல்வதெனின் சட்டத்தரணி ஹிஸ்புல்லாவுடன் தொடர்பான தாகக் கூறப்பட் கட்டார் செரிட்டி அமைப்பு தற்போதும் இலங்கையில் இயங்கிக் கொண் டிருக்கின்றது. அவர்கள் தீவிரவாதக் கருத்துக்களை பரப்பியதாகக் கூறப்பட்ட மத்ரஸாவுடன் தொடர்பான பலரும் கைதுசெய்யப் படாமலேயே உள்ளனர். அவர்களது குற்றத்தை ஒப்புவிப்பதற்கு முன்னர் அவர்களுக்கு சரியான குற்றச்சாட்டுக்கள் கூட சுமத்தப்படவில்லை.
என்றாலும் சட்டத்தரணி ஹிஸ்புல்லா தொடர்பான விசாரணையின் போது புத்தளம் கல்பிடியில் அல்மனார் 4ம் குறுக்குத் தெரு வில் நவரசம் என்ற புத்தகம் கைப்பற்றப் பட்டதாக கூறப்பட்டிருந்தது. பின்னர் ஸீ.ஐ.டீ இனர் இப் புத்தகத்தை எழுதியவர் மொஹமட் ஜஸீம் மொஹமட் அஹ்னம் என்று நீதிமன்றத்திற்கு கூறியிருந்தனர். சிலா வத்துறையைச் சேர்ந்த அஹ்னம் மே மாதம் 16ம் திகதி கைதுசெய்யப்பட்டார். பயங்கர வாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
வாசித்துப் பாருங்கள்
இந்தக் கவிதைகள் இரகசியமான கவிதை களல்ல. நவரசம் புத்தகம் இரகசியமான புத்தகமொன்றல்ல. இக்கவிஞனின் கவிதை கள் சமூகத்திற்கு மறைக்கப்பட்டதொன் றல்ல. தொழிநுட்பம் வளர்ச்சியடைந்துள்ள இக் காலப்பிரிவில் இக் கவிதைகளின் அடிப் படை கருத்தைப் புரிந்துகொள்வதும் சிரம மானதல்ல.
இக்கவிஞரின் ப்ளொக்கரில் ஏப்ரல் 21ம் திகதி தாக்குதலுக்கு மறுநாள் அதாவது ஏப்ரல் 22ம் திகதி தமிழ் மொழியில் எழுதப்பட்ட கவிதையொன்று உள்ளது. அதில் குறித்த தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதி களை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழ் மொழி தெரியாத ஒருவர் கூட mannaaramudhu.blogspot.com/ ப்ளொக்கர் இற்குச் சென்று கூகிள் மொழிபெயர்ப்பை பயன்படுத்தி குறித்த கவிதையை வாசித்து புரிந்துகொள்ள முடியும்.
<http://mannaaramudhu.blogspot.com/2019/04/blog&post_22.html>
நீயும் இறந்து பிறரையும் இறக்கச்
செய்த உனக்கு இறைவன் பெயர் எதற்கு?
நீயும் சிதறி பிறரையும் சிதறடித்த
உனக்கு இஸ்லாத்தின் பெயர் எதற்கு?
நீயும் செத்து பிறரையும் சாகடித்த
உனக்கு நபிகளார் பெயர் எதற்கு?
உன்னையும் கொன்;று பிறரையும் கொன்ற
உனக்கு திருமறை எதற்கு?
ஏதும் அறியா ஓரப்பாவி உயிரை
கொல்வது ஒட்டு மொத்த மனிதத்தையும்
கொல்வதென்று திருமறை சொன்னதை
நீ கற்கவில்லையோ?
பத்தாண்டாய் நிம்மதிப் பெருமுச்சு விட்டோம்
புத்தாண்டையும் பயந்து சாகாமல்
கொண்டாடி மகிழ்ந்தோம் – நீ வந்து
நிமிடத்தில் உருக்குலைத்தாயே!
இலங்கைத் தாய் மீண்டும் விம்மி
அழுகிறாள் – நீயோ நிலையான
சுவனம் கிடைக்கும் என்று உன்னுயிரை
மாய்த்து எம்மனைவரையும் உயிரோடு
நெருப்பிலேற்றிநாயே!
உனக்கு சாவதில்தான் சந்தோசம்
என்றால் எங்கேயாவது மூலையில்
விழுந்து செத்திருக்கலாமே
ஏன் எம்மை இனி தினம் தினம்
செத்துப் பிழைக்க வைத்தாயே!
தற்கொலையே தவறென்று
சொன்ன இஸ்லாத்தின் பெயரால்
நீ தற்கொலையும் செய்து கொலையும்
செய்த உனக்கும் இஸ்லாத்திற்கும்
தொடர்பு ஏதடா? தொடர்பு ஏனடா?
குருதி வெள்ளத்தில் துவண்டு
கிடக்கும் உடற் சிதிலங்களில்
நீ என்ன வெற்றி கண்டாய்?
மூத்தோரையும், சிறாரையும்
யுத்தமென்றாலும் வதைப்பது
தவறாகும் எனும் அண்ணல்
வாக்கை தூக்கி வீசினாயே!
பிறமதக் கடவுளரை தூற்றாதே
துற்றினால் அவர்கள் உன்னிறைவனை
தூநீற்றுவர் எனச்சொன்ன வேளை நீ
தேவாலயங்களின் உள்ளே வெடித்தாயே!
யாவரும் ஆனந்தமாய் கொண்டாடும்
அந்தப் பொழுதிலா இந்தக் காரியம்
செய்தாய் – நீ நிச்சயம் அனுபவிப்பாய்
அன்று நான் உனக்கெதிராய் சாட்சி யளிப்பேன்.
அன்னையும் மகளும்,
தாத்தாவும் பேரனும்
ஆள் அடையாளம்
தெரியாமல் செய்து – நீயும்
அடையாளம் இழந்து
இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும்
குற்றவாளி என அடையாளப் படுத்திநாயே!
இனி தினம் இங்கு சாவே!
எம்மை சாகாடமல் சாகடித்த
என் தோழர்களை சிதறடித்த
உமக்கு என் சாபங்கள்
கோடி கொடு நெருப்பாய்வரும்
ஏசு உயிர்த்த ஞாயிறு என்றே
உலகம் போற்றும் – புண்ணிய
விழாக் கோலம் பூணும் நாளில்
எனக்க ஏதும் நம்பிக்கை இல்லை
ஆனால் அருமந்த உயிர்கள்
இருநூறுபேர் உயிர் நீத்த நாள்
என்று நான் நம்புவேன் – காரணம்
நம் இனத்தின் சில நரிகள்
இழைத்த இழி செயலால்
உயிர் நீத்த உறவுகளுக்கு
என் கண்ணீர் திவலைகள்.
இந்த வரிகளை எவ்வாறு தீவிரவாதம் எனக் கூறமுடியும்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் ஜுன் 17ம் திகதி கொழும்பு கோட்டை நீத வான் முன்னிலையில் கூறப்பட்ட சில விட யங்கள்
“இக் கவிதைகளை எழுதிய இவற்றைக் கற்றுக்கொடுத்த ஆசிரியர் மொஹமட் ஜஸீம் மொஹமட் அஹ்னம் என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகிறோம். இவர் எழுதிய சர்ச்சைக்குரிய நவரசம் என்ற புத்த கம் தொடர்பாக விசாரணை செய்தோம். அதில் சந்தேகத்திற்கிடமான பல விடயங்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. இந்தப் புத்தகமா னது தீவிரவாதக் கருத்துக்களைக் கொண்டது என்பதை நாம் கண்டுபிடித்துள்ளோம். இது தொடர்பாக மேலதிக விசாரணை மேற் கொள்ள வேண்டியுள்ளது. இப்புத்தகத்தைப் படித்த மாணவர்கள் மனது எந்தளவு பாதிக் கப்பட்டுள்ளது என்பதை தேடிப் பார்க்க வேண்டும்.
இப் புத்தகம் மற்றும் இதன சிங்கள ஆங் கில மொழி பெயர்ப்புகள் தொடர்பாக விசா ரணை செய்து அறிக்கை பெற்றுக்கொள்வ தற்காக கொழும்பு சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் இயக்குனரிற்கு கட் டளை வழங்குமாறு நீதிமன்றத்திடம் கேட் டுக்கொள்கின்றேன். இந்தப் புத்தகத்தை படிக்கும் மாணவர்களின் மனதில் ஏற்பட்ட பாதிப்புக்கள் என்ன? மாணவர்களை தற் கொலைக்குத் தூண்டியுள்ளதா? என்பது தொடர்பாக பிள்ளைகள் மற்றும் இளைஞர் களின் மனநிலை தொடர்பான வைத்தியா ளன் அறிக்கையொன்று பெற்றுக்கொள்ளப் பட வேண்டும்.”
இதன்படி இப்புத்தகம் தொடர்பான அறி க்கை பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதில் சிறுவர்களின் மனதைப் பாதிக்கக்கூடிய கவி தைகள் இடம்பெற்றிருப்பதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. தற்போது இந்தக் கவிதை களால் தீவிரவாதம் போதிக்கப்படுகின் றது என்ற குற்றச்சாட்டு மாற்றமடைந்து சிறுவர் மனதிற்கு பாதிப்பு ஏற்படக் கூடியது என்ற குற்றச் சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.
பிள்ளைகளின் மனது பாதிக்கப்படும் என்பது பிழையாகப் புரியப்பட வேண் டிய விடயமல்ல. நமது நாட்டில் ஏற் கனவே வெளி வந்துள்ள பல புத்தகங் களில் மரணம், கொலை போன்ற விட யங்கள் தொடர்பாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் அவை அவற்றைத் தூண்டு வதற்காக எழுதப்பட்டவையல்ல.
கைது செய்யப்படும்போத அவர்கள் எதனை நினைத்துக் கைது செய்தார் களோ தெரியாது. ஆனால் தற்போது அவரது கவிதைகள் தீவிரவாதத்தைப் போதிக்கவில்லை என்பதும் அவை தீவிர வாதத்திற்கு எதிரானவை என்பதும் மிகத் தெளிவானது. நவரசம் புத்தகத்தை வாசிக்காது அதனை தீவிரவாதத்தைப் பரப் பும் புத்தகம் எனக் கூறும் பிரதான ஊடகங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசியல்வாதி ஒருவரின் பேச்சின் ஒரு பகுதியை மொழிபெயர்த்து சாதாரண மக்களை பீதிக்குள்ளாக்கும் வகையில் வெளியிடுவதற்கு இருமுறை சிந்திப்ப தில்லை.
First of all, can they arrest racist media, Derana, Hiru, etc and the Racist ministers, Racist monks, Racist singhala groups..????
ReplyDeleteதமிழர் முஸ்லிம்கள் மலையகதமிழர் சமூகங்களைச் சேர்ந்த கல்விமான்களின் குழு ஒன்று அமைத்து இக்கவிதை நூலை பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இல்லை என்பதை உறுதிப்படுத்தி சர்வதேச ரீதியாக போராடவேண்டும்.
ReplyDelete