Header Ads



இறுதிநிமிட பேச்சு நடத்திய இலங்கை - ஆங்கில ஊடகம்


ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகத்துடன் இறுதி நிமிட பேச்சுவார்த்தையை இலங்கை நடத்தியுள்ளதாக தெரியவருகிறது.

அடுத்த மாதம் ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அமர்வுக்கு முன்னதாக இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த வாரம் பகிரங்கப்படுத்தப்பட்ட இலங்கை குறித்த ஆணையாளரின் அறிக்கை குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆணையாளரின் அலுவலகத்துடன் சில விவாதங்களை நடத்தப்படுகின்றன. அவர் எழுப்பிய விடயங்களில் உடன்பாட்டை எட்ட முயற்சிக்கப்படுகிறது. எனினும் உரிய முறையான பதிலை வெளியிடவுள்ளதாக இலங்கை அரசாங்கத் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

ஆணையாளரின் அறிக்கைக்கு முறையாக பதிலளிக்க எதிர்பார்க்கப்படுகிறது எனினும் அந்த பதிலை பகிரங்கப்படுத்தப்படுவதற்கு முன்னர் ஆணையாளர் மிச்செய்ல் பெச்லெட் அலுவலகத்துடன் ஒருமித்த கருத்தை எட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக இலங்கை அரசாங்கத்தரப்பு கூறியுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவிக்கிறது.

2 comments:

  1. போர்குற்றவாளிகளை தெய்வம் நின்று கொல்லும்.

    ReplyDelete
  2. போர்குற்றவாளிகளை தெய்வம் நின்று கொல்லும்.

    ReplyDelete

Powered by Blogger.