காத்தான்குடி, அட்டாளைச்சேனை, கல்முனை தெற்கு, சாய்ந்தமருது சிவப்பு வலயங்களாக அடையாளம்
கிழக்கில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 58 பேருக்கு கொரோனா தொற்றுதியை அடுத்து கிழக்கில் 1,493 பேராக அதிகரித்துள்ளதுடன் 9 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அ. லதாகரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் காரியாலயத்தில் இன்று (08) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
போலியகொட மீன் சந்தைக்கு பிற்பாடு கிழக்கில் மேற்கொள்ளப்பட்டுவரும் பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் மூலம் நேற்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 58 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதில் மூதூர் பிரதேசத்தில் 5 பேரும், தம்பலகாமத்தில் ஒருவரும், திருகோணமலையில் 4 பேரும், கல்முனை தெற்கில் 8 பேரும், சாய்ந்தமருதில் ஒருவரும், நிந்தவூரில் 5 பேரும், ஏறாவூர் பிரதேசத்தில் 3 பேரும், மட்டக்களப்பு நகரத்தில் ஒருவரும், காத்தான்குடியில் 20 பேருக்கும், வெல்லாவெளி பிரதேசத்தில் ஒருவருக்கும், அம்பாறை பகுதியில் இருவருக்கும், உகன பிரதேசத்தில் 7 பேர் உட்பட 58 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அதேவேளை அம்பாறை, உகன பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய பெண் ஒருவர் தொற்றுள்ளவராக அடையாளம் காணப்பட்டு சிறுநீரக சிகிச்சைக்காக கொழும்பில் உள்ள வைத்தியசாலையில் மாற்றப்பட்டு சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளதை அடுத்து கிழக்கில் உயிரிழந்தோர் 9 ஆக அதிகரித்துள்ளது.
கிழக்கு மாகாணத்தில் கல்முனை நகரப் பகுதியில் சில கிராம சேவகர் பிரிவும், காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவு, திருகோணமலை நகர் ஆகிய 3 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, மக்கள் எவ்வாறு எங்களக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றார்கள் என்ற வகையில் அந்த தொற்று எவ்வாறு வியாபித்துள்ளது பரவுகின்றது என்ற வகையில் தனிமைப்படுத்தல் தங்கியிருக்கின்றது. அதனை அறியும் முகமாக தொடர்ச்சியாக சுகாதார உத்தியோகத்தர், இராணுவம், பொலிஸ், மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் இணைந்து பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றோம்.
விசேடமாக இந்த பகுதியில் உள்ள மக்கள் சுகாதார துறைக்கும் மற்றும் கொரோனா சம்மந்தமாக செயற்படுகின்ற அனைத்து தரப்பினரக்கும் ஓத்துழைப்பை பூரணமாக வழங்கும் பட்சத்தில் மட்டும் தான் இந்த தனிமைப்படுத்தலை மிக விரைவில் நீக்க முடியும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 334 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 193 பேரும், அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் 53 பேரும், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் 915 பேர் உட்பட கிழக்கில் 1493 பேர்களில் 595 தொடர்ச்சியாக சிகிச்சை பெற்றுவருகின்றனர். அவற்றில் 915 பேர் குணமடைந்து வீடு சென்றுள்ளனர்.
கிழக்கில் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. எனவே தொடர்ச்சியாக மக்கள் சுகாதார அமைச்சின் சுகாதார நடைமுறைகளை கடைபிடித்து வருமாறு அவர் கேட்டுக் கொண்டதுடன் டெங்கு நுளம் பின் தாக்கம் மட்டக்களப்பில் சில சுகாதார அதிகாரிகள் பகுதிகளில் அதிகரித்து வருகின்றது.
எனவே, இந்த கொரோனா மற்றும் டெங்கு நோய் தாக்கம் ஆகிய இரு நோய்தாக்கத்திற்கும் இடையிலான இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றோம். எனவே, பொதுமக்கள் தமது வீடுகளை சுகாதாரமாக பேணி டெங்கு நுளம்பை ஒழிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.
-மட்டக்களப்பு நிருபர் சரவணன்-
why All Muslim are ? antimuslim is working very hard
ReplyDelete