மாடுகளுக்கு இடையில் பரவும் நோய் - பொலன்னறுவ, அனுராதபுர, கண்டி பகுதிகளில் கண்டுபிடிப்பு
மாடுகளுக்கு இடையில் பரவி வரும் தோல் வைரஸ் தொற்று தொடர்பில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளது.
பொலன்னறுவ, அனுராதபுர, கண்டி உட்பட பசு மாடுகளை வளர்க்கும் பல்வேறு பகுதிகளில் இருந்து இந்த நோய் தொடர்பில் தகவல்கள் கிடைக்கபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தோலில் காயங்கள் ஏற்படுதல் மற்றும் காய்ச்சல் போன்ற நோய் அறிகுறிகள் தென்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வைரஸ் ஈயின் ஊடாக பரவுவதாக பொலன்னறுவை மிருக வைத்திய அதிகாரி வைத்தியர் பிரியந்த கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
Post a Comment