உதய கம்மன்பில அவர்களே...!
இரண்டுமுறை முழுமையாக அல்குர்ஆனை வாசித்த உங்கள் கண்களில் இது தென்படாமல் இருந்ததை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. யாரோ கூறியதை காதில் வாங்கிவந்து பாராளுமன்றில் கூறினீர்கள் என்றே நினைக்கத் தோன்றுகிறது.
காரணம்! முழுக் குர்ஆனை இரண்டுமுறை படித்திருந்தால் நிச்சயம் இஸ்லாம் பற்றி இம்மண்ணில் தூவப்படும் ஏராளமான கருத்துக்கள் அவதூறானவை என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். இஸ்லாத்தின் சீரிய கலாசாரத்தை கற்று ஆச்சரியித்துப் போயிருப்பீர்கள். இந்நாட்டிற்கு முஸ்லிம்கள் எந்தளவு அவசியமானவர்கள் என்பதை உரத்துப் பேசியிருப்பீர்கள்.
அமைச்சர் அவர்களே தங்களின் வாத முறைமைக்காக அல்குர்ஆனின் இரு வசனங்களை இங்கு சமர்பித்துள்ளேன். எனினும் தாங்கள் ஒரு விடயத்தை நடுநிலையோடு நிதானமாக சரியாகப் புரிந்து கொள்ளக் கடமைப் பட்டுள்ளீர்கள்.
அதாவது; எம்மில் யாருமே அல்குர்ஆனை ஆதாரமாகக் காட்டி அடக்கம் செய்வதற்கான அனுமதியை கோரவில்லை. உலக சுகாதார ஸ்தாபணத்தின் சுற்றரிக்கையையும், உலகம் பூராகவும் நடைமுறை படுத்தப் படுகின்ற நடைமுறையையும் ஆதாரமாக காட்டியே அடக்கத்திற்கான அனுமதியை கோருகிறோம்.
இப்பொழுதும் கூறுகிறோம். உலக சுகாதார ஸ்தாபணம் அங்கீகரித்து உலகம் பூராவும் ஏற்று நடைமுறைப் படுத்துகின்ற "எரிக்கவும் முடியும், அடக்கம் செய்யவும் முடியும்" என்ற உரிமையை எமக்கு விட்டுக் கொடுங்கள். நாம் இந்நாட்டின் மைந்தர்கள். மட்டுமல்லாது உள்ளத்தால் இந்நாட்டை நேசிப்பவர்கள். நாட்டுக்காக எம்மாலான அனைத்து வகையிலும் உழைப்பவர்கள்.
நடுநிலையோடு இந்நாட்டு முஸ்லிம்களது வரலாற்றை புரட்டிப் பாருங்கள். காரிருளுக்குள் ஔி வீசும் ஔக்கீற்றுகளாக ஆங்காங்கே எமது வரலாறு மின்னும். முஸ்லிம்கள் இல்லாத, அல்லது முஸ்லிம்களது பொருளாதாரம் முடக்கப்பட்ட ஒரு நாடாக இந்நாட்டை பார்க்க வேண்டுமென்ற சிலரது போக்கு மிக மோசமான சிந்தனையாகும். இச்சிந்தனையால் இந்நாட்டுக்கு சாதகங்களைவிட பாதகங்களே அதிகம். வீட்டு முற்றத்துக்குக்கூட விளக்கு போட்டு பாதையால் நடப்பவர்களுக்கு உதவி செய்ய துணியாதவர்களுக்கு மத்தியில் முஸ்லிம்களின் பொது சேவைகளை கணக்குப் போட்டுப் பாருங்கள். உதவி எனும் பெயரால் நாட்டில் பிறக்கும் ஒவ்வோர் குழந்தைகளையும் கடனாளியாக ஆக்கி நாட்டை அடகு பெற்றுள்ள தோழமை நாடுகளுக்கு மத்தியில் வட்டியில்லாமல் கடனும் தர்மங்களாக பல்வகை உதவிகளும் செய்யும் முஸ்லிம் நாடுகளது உறவை நடுநிலையுடன் பாருங்கள். இந்நாட்டின் வளங்களில் முஸ்லிம்களும் ஒன்று என்பதை உணர்வீர்கள்.
தயவு செய்து சமகால அரசியல் நாள் கடத்தலுக்காக இந்நாட்டின் மலர்ச்சிமிக்க எதிர்காலத்தை சூன்யமாக்கி விடாதீர்கள். அனைத்தினத்தவர்களும் புரிந்துணர்வுடன் அவரவர் மத வழிமுறைகளை கடைபிடித்து ஆண்மீகம் தவறாது பயனிப்பதில்தான் சிறந்த பிரஜைகளையும் சிறந்த எதிர்காலத்தையும் உருவாக்கலாம் என்பதை உணர்வோமாக.
அபூ ஸுமையா
இதனை ஆங்கில, சிங்கள மொழிகளிலும் பெயர்த்து பரப்புரை செய்ய முடியாதா ?
ReplyDeleteMasha allah. Great explanation
ReplyDeleteஇதனை சிங்கள ஆங்கில மொழிகளிலும் மொழிமொழிபெயர்ப்புச் செய்யுங்கள்.
ReplyDelete