Header Ads



ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் பாதுகாப்பு, குறித்து குடும்பத்தினர் அச்சம்


தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் பாதுகாப்பு குறித்து அச்சம் இருப்பதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

“ஹிஸ்புல்லாவுக்கு நீதி” என்ற டுவிட்டர் பதிவில் அவர்கள் தமது அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை சட்டத்தரணி ஹிஸ்புல்லாஹ், பாதாள உலக முக்கியஸ்தரான கொஸ்கொட தாரகவுடன் சேர்த்து களுத்துறையில் உள்ள சிகிச்சை நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் அவர் வைக்கப்பட்டுள்ள இடம் குறித்து சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்தபோதும் பயன் எதுவும் இல்லை.

2021 ஜனவரி 7ஆம் திகதியன்று ஹிஸ்புல்லாஹ் கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்படவிருந்தார்.

எனினும் கொரோனா தொற்று என்றுக்கூறி அவர் மன்றில் முன்னிலைப்படுத்தப்படவில்லை.

கொரோனா காரணமாக அவர் அவர் அங்கொட தொற்று நோயியல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டது.

எனினும் பின்னர் அவர் களுத்துறையில் உள்ள ஒரு சிகிச்சை நிலையத்துக்கு மாற்றப்பட்டதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில் திடீரென நிகழ்ந்த சம்பவங்கள் சந்தேகத்திற்கு வழிவகுப்பதாக ஹிஸ்புல்லாஹ்வின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

3 comments:

  1. அல்லாஹ்தான் பாதுகாப்பு வழங்கனும்

    ReplyDelete
  2. MAKAR ANIYAM PANNUNGO
    INSHA ALLAH ALLAH PODHUMANAWAN.
    SABOOR SABOOR ALLAH NALLA NILAMAYA KONDUWARUWAN.IDHU AWANUDAYA ULAGHAM.

    ReplyDelete
  3. Human rights and a democracy are dying in Sri Lanka

    ReplyDelete

Powered by Blogger.