Header Ads



அல்குர்ஆன் தொடர்பில் நான் விசேட நிபுணரல்ல, உடல் அடக்கம் குறித்து நான் கேட்டதற்கு எவரும் பதிலளிக்கவில்லை - கம்மன்பில


- நன்றி வீரகேசரி -

அல்குர்ஆனில் எந்தவொரு இடத்திலும் சடலங்களை அடக்கம் செய்வது பற்றி குறிப்பிடவில்லை என அமைச்சரவை இணைப்பேச்சாளரும் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று -12- நடைபெறும் வாராந்த அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது, ஊடகவியலாளர் ஒருவர், அமைச்சராகிய நீங்கள் சமீபத்தில் பாராளுமன்றத்தில் அல்குர்ஆன் குறித்து குறிப்பிட்டிருந்தீர்கள். அதனை ஆய்வு செய்தா முஸ்லிம்களின் சடலங்களை தகனம் செய்வது தொடர்பாக கருத்து தெரிவித்தீர்கள்? என கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு பதிலளித்துப் பேசும்பேதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். அந்த கேள்விக்கு மேலும் பதிலளித்த அமைச்சர்,

அல்குர்ஆனை முழுமையாக படித்த பின்னே நான் கருத்து தெரிவித்தேன். அல்குர்ஆனை நான் 2 முறை வாசித்தேன். அல்குர்ஆனில் எந்தவொரு இடத்திலும் சடலங்களை அடக்கம் செய்வது பற்றி குறிப்பிடவில்லை.

அல்குர்ஆன் தொடர்பில் நான் விசேட நிபுணர் அல்ல. விசேட நிபுணர் யாராயினும் நான் தெரிவித்த கருத்து தொடர்பில் கருத்து தெரிவிக்குமாறு நான் கோரிக்கை விடுத்திருந்தேன். குர்ஆனில் குறிப்பிட்ட பக்கத்தை சுட்டிக்காட்டி நான் இதனை தெரிவித்தேன்.

குர்ஆனில் இந்த சடல அடக்கம் குறித்து தெரிவிக்கப்பட்டிருக்குமாயின், அது குறித்து விளக்கம் அளிக்குமாறு நான் கேட்டிருந்தேன். ஆனால் இது குறித்து எவரும் பதிலளிக்கவில்லை. சிலர் சமூக ஊடகங்கள் மூலமாக குர்ஆன் குறித்து தகவல்கள் அனுப்பி வைத்திருந்தனர். ஆனால் அவற்றில் எதிலும் சடலங்களை அடக்கம் செய்வது குறித்து குறிப்பிடப்படவில்லை. 

அதேவேளை தகனம் செய்வது தடைசெய்யப்பட்டிருப்பதாக எந்த இடத்திலும் செல்லப்பட்டும் இல்லை. நான் அரசாங்கத்தின் தீர்மானத்தை அறிவிக்கும் பேச்சாளராகவே வந்துள்ளேன். எனது தனிப்பட்ட, கட்சி தொடர்பான கேள்விகள் கேட்க விரும்பினால் அவை தொடர்பில் நடைபெறும் செய்தியாளர் மாநாட்டிலே வினவ வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

4 comments:

  1. Please don´t answer him.We don´t care you.

    ReplyDelete
  2. உண்மையில் இது இலங்கையின் முஸ்லிம் வாக்காளர்களின் மாபெரும் தவறும் அவரகள் தேர்தல் காலங்களில் சமூகத்திற்கு இழைத்த துரோகமுமாகும். சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் "நக்குண்டார் நாவிழந்தார்" என்பதுபோல் "அரசகருத்துகளுக்கு" மாற்றுக்கருத்தினைத் தெரிவிக்கும் "திறனை" 20A க்குப் பின்னர் இழந்திருந்தமை இதன்மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்தது ஏனைய உறுப்பினர்களுக்கு இஸ்லாம் மற்றும் குர்ஆன் ஹதீஸ் போன்றவற்றில் போதிய அறிவற்ற தன்மை இருந்ததுமாகும். அத்துடன் ஏதோ பொதுக்கூட்டங்களில் பேசுவதற்காக முன்ஆயத்தம் செயது வைக்கப்பட்டிருந்த சில குர்ஆன் மற்றும் ஹதீஸ்களுடைய வசனங்களைத் தவிர வேறெதுவும் அவரகளுக்குத் தெரியாத நிலைமை இதன்மூலம் நன்கு புலப்படுத்தப்பட்டுள்ளது தெரிய வருகின்றது.

    ReplyDelete
  3. then, why did you open your bloody F*** racist mouth regarding this issue?

    ReplyDelete
  4. The ACJU has replied him. Al Hamdulillah. Let's hope he doesn't continue his harangue any more.

    ReplyDelete

Powered by Blogger.