கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தை விற்கவோ, குத்தகைக்கு விடவோ மாட்டோம் - ஜனாதிபதி திட்டவட்டம்
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை விற்கவோ அல்லது குத்தகைக்கு விடவோ படமாட்டாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ துறைமுக தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்தியதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
தொழிற்சங்கத்தின் கோரிக்கைக்கு அமைய, கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் இன்று (13) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டினுள் மேற்கொள்ளப்படும் முதலீடுகளின் போது நாட்டின் இறையாண்மைக்கு அல்லது சுயாதீனத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுவதற்கு தான் இடமளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
சபாஸ் நல்ல போட்டி. ஊருக்கு உபதேசம் உங்களுக்கில்ல ஷி ஜின்பிங்.
ReplyDeleteso which one was giving to china then,
ReplyDeleteGoing to loose the major income which came through the big ships to India and docked in Colombo harbor.
ReplyDeleteSmall ships took the containers to Indian ports from here
If India build one in South cost a total chaos in that income