Header Ads



சீனா குழப்புகின்றது - இலங்கை விவகாரத்தில் இந்தியா கவலை


இலங்கையில் இந்தியா முன்னெடுக்கும் அபிவிருத்தி திட்டங்களில் சீனாவின் குறுக்கீடுகள் செல்வாக்குகள் குறித்து இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் கரிசனை வெளியிட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையம் திட்டம் உட்பட இந்தியா இலங்கையில் முன்னெடுத்துள்ள அபிவிருத்தி திட்டங்கள் குறித்து வெளியாகும் கருத்துக்களே சீனா திட்டமிடுகின்றது வழிநடத்துகின்றது என்ற கரிசனை காரணமாகவே இந்திய வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயம் இடம்பெற்றது என அறிய முடிந்துள்ளதாக சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சரின் விஜயம் குறித்து அவரின் வருகை இடம்பெறுவதற்கு சில நாட்களிற்கு முன்னரே இலங்கைக்கு அறிவிப்பு வழங்கப்பட்டது என்பதை சுட்டிக்காட்டியுள்ள தகவலறிந்த வட்டாரங்கள் இந்த விஜயம் ஒருசில நாட்களில் திட்டமிடப்பட்டது என தெரிவித்தன என சண்டே டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையமே இந்த விஜயத்தில் பிரதான நிகழ்ச்சி நிரலாக காணப்பட்டது எனவும் சண்டேடைம்ஸ் தெரிவித்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையம் ஒரு கூட்டு முயற்சி என்பதையே சித்தரிக்கவேண்டும்,இந்திய அரசாங்கம் திணிக்கும் ஒன்று என காண்பிக்ககூடாது என தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையம் குறித்து வெளியாகும் கருத்துக்களை சீனாவின் புலனாய்வுபிரிவினர் ஊக்குவிக்கின்றனர் அந்த திட்டத்தினை தடுப்பதே அவர்களின் நோக்கம் என புதுடில்லி கவலை கொண்டுள்ளதாக சண்டே டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன்முனையம் குறித்து மாத்திரம் புதுடில்லி கரிசனை கொண்டிருக்கவில்லை மாறாக இந்தியாவின் அனைத்து முயற்சிகளையும் சீனா தடுக்கின்றது குழப்புகின்றது என்ற கரிசனை புதுடில்லியிடம் காணப்படுகின்றது என சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.