பிரதமரின் ஊடகப் பணிப்பாளர் கைது
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பணிப்பாளர் விஜயானந்த ஹேரத், வாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நவகமுவ பிரதேசத்தில் வைத்து தன்னுடைய வாகனத்தில் இருவரை முட்டிமோதி காயப்படுத்தினார் என்றக் குற்றச்சாட்டின் கீழே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில், அவர் மதுபோதையில் இருந்தார் என நவகமுவ பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகச் செயலாளர் ரொஹான் வெலிவிட்ட அக்குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இதேநேரம் விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் விஜயானந்த ஹேரத் தனது சொந்த வாகனத்திலேயே இருந்துள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment