கரு ஜயசூரிய வெளியிட்டுள்ள அறிக்கை
நாட்டின் அரச தலைவர் மேற்கொள்ளும் உரையாடல்கள், கருத்துக்கள் குறித்து நாட்டு மக்கள் கவனம் செலுத்துவது சாதாரணமான விடயம் என்பதுடன் அது தவிர்க்க முடியாதது என, நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலைமையை ஜனாதிபதி புரிந்துகொண்டு செயற்பட வேண்டும் என கரு ஜயசூரிய வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அண்மையில் அம்பாறையில் வெளியிட்ட கருத்து அச்சுறுத்தலானது என சிலர் கருதுகின்றனர். பௌத்த பிக்குமார் கூட ஜனாதிபதியை ஜனாதிபதியாக அல்லாமல் முன்னாள் பாதுகாப்புச் செயலாளராக செயற்பட வேண்டும் என கோரியுள்ள பின்னணியில், ஜனாதிபதியின் கருத்து அச்சுறுத்தலானது என நினைப்பது சாதாரணமானது.
ஜனநாயகம் அரசாளும் சமூகத்தில் வன்முறை மற்றும் உயிர் அச்சுறுத்தல்களை நாங்கள் எந்த வகையிலும் அனுமதிக்க மாட்டோம். நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவோ அல்லது எந்த மக்கள் பிரதிநிதிக்கும் மரண அச்சுறுத்தல் விடுத்து பயமுறுத்துவதை ஒழுக்கமான சமூகம் நிராகரிக்கும் எனவும் கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.
ஒழுக்கமா? கிலோ என்ன விலை ஐயா?
ReplyDelete