ரஞ்சனுடன் தொலைபேசியில், உரையாடிய ரணில்
ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னர், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்கவின் சட்டத்தரணியின் தொலைபேசியின் ஊடாக ரணில் விக்ரமசிங்க, ரஞ்சனுடன் உரையாடியுள்ளார். அப்போது தான் ஜனாதிபதியின் பொது மன்னிப்பை கோர எதிர்பார்த்துள்ளதாக ரஞ்சன் ராமநாயக்க நகைச்சுவை கலந்த தொனியில் கூறியதாக ஆங்கில பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நீதிமன்ற தீர்ப்பு அறிவிக்கப்பட்ட பின்னர் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லும் போது ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டிருந்த ரஞ்சன் ராமநாயக்க, எந்த சந்தர்ப்பத்திலும் மன்னிப்பு கோர போவதில்லை. நான் கூறிவற்றை திரும்ப பெற போவதில்லை. இவர்கள் அனைவரும் திருடர்கள். பிள்ளையான் வெளியில், ரஞ்சா உள்ளே எனக் கூறியிருந்தார்.
Post a Comment