இலங்கையில் இலவசமாக கொரோனா, தடுப்பூசிகளை வழங்க திட்டம்
இந்த நிலையில் அனைவருக்கும் இலவசமாக இந்த தடுப்பூசிகளை வழங்கும் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுவதாக தொற்று நோயியல் தலைமை நிபுணர் வைத்திய கலாநிதி சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
எந்த தடுப்பூசிகள் கிடைத்தாலும் நான்கு வாரங்களுக்கு ஒருமுறை என்ற அளவில் இரண்டு தடவைகள் இந்த தடுப்பூசி செலுத்தப்படவேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி ஒன்றின் விலை 20 டொலர்களாகும். ஒக்ஸ்போட்- என்ட்ராசெனேக்கா தடுப்பூசியின் விலை 3 டொலர்களாக உள்ளது.
இதில் பெரும்பாலும் ஒக்ஸ்போட்- என்ட்ராசெனேக்கா தடுப்பூசியே இலங்கைக்கு பொருத்தமாக இருக்கும் என்று ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் 2021 ஜனவரி 15ஆம் திகதியன்று இந்த தடுப்பூசிகளுக்கான விண்ணபத்தை சமர்ப்பிக்கும் இறுதி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த தடுப்பூசிகள் ஒரு லட்சத்துக்கு 55 ஆயிரம் முன்னிலை சுகாதாரப் பணியாளர்கள், ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 500 படையினர், 60 அகவைக்கும் மேற்பட்ட 31 லட்சத்து 59 ஆயிரத்து 800 தொற்றா நோயால் பாதிக்கப்பட்டவர்கள், 55க்கும் 59 அகவைக்கும் உட்பட்ட 11 லட்சத்து 78 ஆயிரத்து 154 பேர் ஆகியோருக்கு முதல் கட்டமாக வழங்கப்படவுள்ளன.
Post a Comment