'கட்டாயத் தகனம்' என்ற தீர்மானத்தை அரசாங்கம் உடனடியாக நீக்கவேண்டும், உடல்களை அடக்குவதால் வைரஸ் பரவ எவ்வித ஆதாரங்களும் இல்லை
(நா.தனுஜா)
கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதால் வைரஸ் பரவும் என்பதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை. எனவே குறித்தவொரு சமூகத்தை இலக்குவைக்கும் விதமான 'கட்டாயத் தகனம்' என்ற தீர்மானத்தை அரசாங்கம் உடனடியாக நீக்கவேண்டும்.
மாறாக விஞ்ஞானபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட காரணிகளை மையப்படுத்தியே தீர்மானங்களை எடுக்கவேண்டும் என்று நியாயமான இலங்கைக்கான இளைஞர்கள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
நியாயமான இலங்கைக்கான இளைஞர்கள் அமைப்பினால் கொழும்பு மன்றக்கல்லூரியில் இன்று வியாழக்கிழமை -07- ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பெனிஸ்லஸ் துஷான், நபீலா இக்பால், செனெல் வன்னியாராச்சி, நெத்மினி மெடெவல, சுச்சித் அபேயவிக்கிரம ஆகியோர் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டனர்.
அதன்போதே மேற்கண்டவாறு ஒருமித்து வலியுறுத்தினர்.
இந்த தலைப்புகளில் எழுதப்படும் செய்திகள் இனி ஏட்டுச்சுரைக்காய்தான். தத்தம் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒரு சமூகத்தையே பழிவாங்கும் அநியாதக்கார துரோகிகள் மீது அல்லாஹ்வின் தண்டனை தாமதமின்றி இறங்க பிரார்திப்போம். அவசரப் படாமல் இருப்போம்.
ReplyDelete