எருக்கலம்பிட்டி தனிமைப்படுத்தப்பட்டது
கொரோனா தொற்றுக்குள்ளான ஐவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, மன்னார் – எருக்கலம்பிட்டி பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
எருக்கலம்பிட்டியில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையின் போது, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து குடும்ப உறுப்பினர்கள் 6 பேர் அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
நோயாளர்கள் திருமண வீட்டிற்கு சென்று வந்தார்கள் என்பதன் அடிப்படையில், நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறியும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் T.விநோதன் குறிப்பிட்டார்.
இதேவேளை, வட மாகாணத்தில் நேற்று 496 பேருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அதில் 13 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
எருக்கலம்பட்டியில் இனங்காணப்பட்ட ஐவர் தவிர, வவுனியாவில் ஐவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Post a Comment