Header Ads



இஸ்ரேல் - சூடான் இடையே ஒப்பந்தம் கையெழுத்து


இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த மோதலை தனிக்கும் விதமாக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் முயற்சியால் பல்வேறு அரபு நாடுகளும் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்ததில் ஈடுபட்டு வருகிறது. இதன் மூலம் அரபு நாடுகள் இஸ்ரேலை தனிநாடாக அங்கீகரிப்பது மட்டுமல்லாமல் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராகவும் அங்கீகரித்து வருகிறது. 

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகம், பக்ரைன் மற்றும் மொரோக்கோ ஆகிய அரபு நாடுகள் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. 

இந்நிலையில், அரபு நாடான சூடானும் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. அமெரிக்காவின் முயற்சியால் இரு நாடுகளுக்கும் இடையே நேற்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த தகவலை அமெரிக்க தூதரகம் உறுதி செய்துள்ளது.

சூடானை பயங்கரவாத ஆதரவு நாடுகள் பட்டியலில் இருந்து சமீபத்தில் அமெரிக்கா நீக்கியது. இந்த நடவடிக்கையை தொடர்ந்து இஸ்ரேலுடன் சூடான் அமைதி ஒப்பந்தம் (ஆபிரகாம் உடன்படிக்கை) செய்துகொண்டுள்ளது.

இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள சூடானுக்கு ஆண்டுக்கு 1 மில்லியன் டாலர் நிதி வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. இது அமெரிக்க நிதித்துறை கருவூல தலைமை அதிகாரியின் சூடான் பயணத்தை தொடர்ந்து ஏற்பட்ட நிகழ்வாக உள்ளது. 

1 comment:

  1. Land of Palestine and Jerusalem are compromised for Money by these so called Muslim leaders due to their HUBBUD DUNYA (love for wealth and fear of death)
    Many others so called leaders are waiting for their turn for this deal to disappoint True Muslim Umma...

    ReplyDelete

Powered by Blogger.