மத்திய கிழக்கில் சிக்கித்தவிக்கும் எமது மக்களை, பாதுகாப்பாக கொண்டுவருவதில் வியாபாரம் செய்கின்றனர்
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
வெள்ளையர்களுக்கு சொகுசான சுற்றுலா வசதிகளை செய்துகொடுக்கும் அரசாங்கம் மத்திய கிழக்கில் சிக்கித்தவிக்கும் எமது மக்களை பாதுகாப்பாக கொண்டுவருவதில் வியாபாரம் செய்கின்றனர்.
எமது மக்களின் வேதனையில் வியாபாரம் செய்வதை எண்ணி அரசாங்கம் வெட்கப்பட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக சபையில் அரசாங்கத்தை கடுமையாக சாடினார்.
இன்று மத்திய கிழக்கில் தொழிலை இழந்துள்ள எமது பெண்கள் தமது வாழ்வாதாரத்திற்காக விபச்சாரத்தில் ஈடுபடும் மிக மோசமான நிலைமை உருவாகியுள்ளதாகவும் அவர் சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை, 27/2 இன் கீழ் சிறப்பு கூற்றொன்றை முன்வைத்த மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Post a Comment