சுதந்திர சதுக்கத்திற்கு முன் ஆர்ப்பாட்டம் - ஹரீன், ரஞ்சன் குறித்து சஜித் பேச்சு
இலங்கை ஒரு இறையாண்மை கொண்ட ஜனநாயக நாடு. சமுதாயத்தில் விவாதங்கள் வெவ்வேறு கருத்துக்களைக் பலர் கொண்டிருக்கலாம், ஆனால் அனைத்து குடிமக்களுக்கும் கருத்துச் சுதந்திரம்,கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமை ஆகியவை உள்ளன. அதை பாராளுமன்றத்திலும் கூறலாம் அதற்கு வெளியிலும் கூறலாம்.அது எவ்வளவு சக்தி வாய்ந்ததாக இருந்தாலும் அதை சிதைக்க முடியாது.
பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தனது கருத்துக்களை எந்த வகையிலும் வெளிப்படுத்தும் உரிமை அவருக்கு உண்டு. அவ்வாறு செய்யவதை யாராவது மிரட்டினால், நான் அதை கடுமையாக கண்டிக்கிறேன். ஒரு குடிமகன் பேசும் உரிமையை இழந்தால், நாங்கள் அதற்கு எதிராக போராடுவோம்.
பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாக, அவரது பாதுகாப்பு குறித்து பிரச்சினைகள் எழுகின்றன. நாங்கள் ஒரு கட்சியாகவும், நாடாளுமன்ற உறுப்பினரின் பாதுகாப்பிற்கான சக்தியாகவும் ஒன்றாக நிற்கிறோம்.
ஹரின் பெர்னாண்டோ ஒரு பிரகாசமான எதிர்காலம் கொண்ட ஒரு முற்போக்கான தலைவர். தூர நோக்குப் பார்வை கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்.அவரது உயிருக்கு ஏதேனும் தீங்கு ஏற்பட்டால் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும்.சில அரசு பாராளுமன்ற உறுப்பினர்கள் இது குறித்து கேலிக்குரிய அறிக்கைகளை வெளியிடுகிறார்கள்.அவர்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும்.ஒவ்வொரு குற்றச்சாட்டையும் தாங்கிக்கொள்ள ஒரு தலைவருக்கு வலிமை இருக்க வேண்டும்.ஒருவரின் பேச்சு சுதந்திரத்தை மீறும் விதமாக தமது செயற்பாடுகளை அனுமதிக்க வேண்டாம். ஒரு கட்சியாக நாம் தொடர்ந்து அதற்கு உறுதியுடன் இருக்கிறோம்.
மனிதாபிமான பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பற்றி நான் சொல்ல வேண்டும். சிலர் அவரை எதிர்பார்க்காத நேரத்தில் அவருக்கு தேர்தலில் போட்டியிடும் உரிமையைக் கொடுத்தேன். அவருக்கு வந்த ஒவ்வொரு சவாலிலும் நாங்கள் அவருக்கு ஆதரவாக நின்றோம். நீதிமன்ற தீர்ப்புகளைப் பற்றி நாம் எந்த வகையிலும் பேசக்கூடாது.
அவரது ஆசனத்தைப் பாதுகாக்க நாங்கள் சட்ட நடவடிக்கை எடுப்போம்.ரஞ்சன் ராமநாயக்க ஒரு மனிதாபிமானமிக்கவர்.அவர் மக்களால் நேசிக்கப்படுகிறார் என்று தெரிவித்தார்.
Post a Comment