வெளிநாட்டிலிருந்து வருபவர்களே, சட்டவிரோதமாக பணம்பெற ஒத்துழைக்காதீர்கள் - இராணுவத்தளபதி
வெளிநாடுகளில் இருந்து இந்நாட்டிற்கு வரும் நபர்களை தனிமைப்படுத்துவதற்காக ஹோட்டல்களுக்கு அனுப்பும் போது சட்டவிரோதமாக பணம் பெறும் மூன்றாம் தரப்பினருக்கு அதற்காக எவ்வித சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்திக் கொடுக்க கூடாது என தனிமைப்படுத்தல் செயன்முறையோடு தொடர்பு பட்டுள்ள ஹோட்டல் உரிமையாளர்களுக்கு இராணுவத்தளபதி ஜெனரால் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
கொவிட் 19 வைரஸின் இரண்டாம் அலை பரவலின் பின்னர் இவ்வாறான மோசடியான செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களை கைது செய்யும் நடவடிக்கையொன்று செயற்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி தெரிவித்தார்.
தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை மிகவும் உயர் தரத்தில் மற்றும் நம்பகத்தன்மையுடனும் பராமரித்துச் செல்ல இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளதால் அது தொடர்பில் இராணுவத்தினால் கட்டமைக்கப்பட்டுள்ள விம்பத்திற்கு சேதம் விளைவிக்க எவருக்கும் வாய்ப்பளிக்கப்பட மாட்டாது என இராணுவத்தளபதி மேலும் தெரிவித்தார்.
கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தில் ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் ஹோட்டல் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இராணுவத்தளபதி இதனை தெரிவித்தார்.
Post a Comment