மரணத்தை வைத்து அரசியல் செய்கின்றார்கள், முடிந்தால் என்னை கைது செய்யுமாறு சவால் விடுகின்றேன் - அசாத் சாலி
முடியுமென்றால் தம்மை கைது செய்யுமாறு தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி சவால் விடுத்துள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அசாத் சாலி போன்றவர்கள் உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் எனவும் அவர்களை கைது செய்யாமை காவல்துறையினரின் குறைபாடாகும் எனவும் அமைச்சர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியிருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் அசாத் சாலி இன்றைய தினம் இந்த சவாலை விடுத்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
“அசாத் சாலியை கைது செய்யுமாறு விமல் கோருகின்றார். மரணத்தை வைத்து அரசியல் செய்கின்றார்கள், முடிந்தால் என்னை கைது செய்யுமாறு விமல் வீரவன்சவிற்கு நான் சவால் விடுகின்றேன்” என அசாத் சாலி கூறியுள்ளார்.
வெட்டிப் பேச்சுப் பேசுவதிலேயே விமல் வீரவன்ச தனது காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கின்றார். இவருடைய வழியைப் பின்பற்றுபவரகளும் பாராளுமன்றின் உள்ளும் புறமும் இருக்கின்றனர். விமலின் அடிப்படை அரசியல் வாழ்வே மிகவும் வித்தியாசமானது. 1971ம் ஆண்டைய கலவரம் வெற்றி கொள்ளப்பட்டிருந்தால் இந்நேரம் விமலின் வாழ்வே மிக வித்தியாசமாகவே இருந்திருக்கும். ஜனநாயக நாடு ஒன்றின் அரசியல் தலைவர்களது இயல்புகள் மக்கள் மயப்பட்டதாகவே இருக்க வேண்டும். சகல மக்களுக்குமான தலைவர்களே நாட்டின் பொருளாதார சமூக கலாசார வளர்ச்சிக்குத் தேவை. தனது நலத்தையும் அதிகாரத்தையும் வளர்த்துக் கொள்ளும் அரசியல்வாதிகள் அல்லர். மக்களின் தூக்கம் முடிவதற்கு முன்னரே நிலைமைகள் சீர்திருத்தப்படல் வேண்டும். எல்லாக் காலமும் ஒன்றுபோல் இருக்கமாட்டாது.
ReplyDelete