Header Ads



இடியாப்பம் சாப்பிட கறி எடுத்த மாமியாரை கத்தியால் தாக்கிய ஆசிரியை - வீடியோ எப்படி வெளியாகியது தெரியுமா..?


தனது அனுமதியை பெறாது இடியப்பம் சாப்பிடுவதற்காக கறியை எடுத்த தனது மாமியாரை கத்தியை கையில் வைத்து கொண்டு மிரட்டி மாமியாரை தாக்கிய சம்பவம் தொடர்பில் ஆசிரியை ஒருவரை கம்பளை பொலிஸார் சந்தேகத்தில் கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட குறித்த ஆசிரியை கம்பளை மாவட்ட நீதிமன்ற மேலதிக நீதிவான் லலித் வீரசேன முன்னிலையில் ஆஜர்ப்படுத்தியபோது நபரை நீதிவான் கடுமையாக எச்சரித்து 5000 ரூபா சரீரி பிணையில் செல்ல அனுமதித்தார். 

கம்பளை சிங்காப்பிட்டிய சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான மேற்படி ஆசிரியை கத்தியினால் மேற்கொண்ட தாக்குதலில் காயமடைந்த மாமியாருக்கு கம்பளை நகரில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலை சிகிச்சை வழங்கப்பட்டுள்ளமை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்தது. 

இதே வேளை சில தினங்களுக்கு முன்னர் சந்தேக நபர் தனது மாமியார் தன்னிடம் அனுமதி கோராமல் இடியாப்பம் சாப்பிட சொதி உற்றிக் கொண்டமையால் சினமடைந்து மாமியை கைகளாலும் கத்தி ஒன்றினாலும் சரமாரியாக தாக்கிய சம்பவம் அதனை ஆசிரியை 10 மற்றும் 9 வயதுகளுடைய அவரின் இரு பிள்ளைகளும் தாய்க்கு தெரியாமல் கைத்தொலைப்பேசியில் வீடியோ செய்துள்ளனர். இந் நிலையில் குறித்த வீடியோ வானது சில தினங்களுக்கு முன்னர் தாக்குதலுக்கு இலக்கான பெண்ணின் மகளிடம் சிக்கியதனையடுத்து அதனை அவர் சமூக வளைத்தலங்களுக்கு பதிவேற்றியுள்ளார். 

பின்னர் இந்த காணோளி வைரலாக பரவியதையடுத்து மேற்படி வீடியோ கம்பளை பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து. குறித்த ஆசிரியை ஞாயிற்றுகிழமை 10 கைது செய்து அன்றைய தினம் மாலை மேலதிக நீதிவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போதோ மேற்கண்ட உத்தரவை நீதிவான் பிறப்பித்தார். 

-கண்டி நிருபர் ராஜ்-

No comments

Powered by Blogger.