நினைவுத் தூபிக்கு துணைவேந்தரினால் அடிக்கல் நாட்டப்பட்டது - மாணவர்களின் உணவு தவிர்ப்பையும் கஞ்சி வழங்கி முடித்துவைத்தார்
யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சிறி சற்குணராஜா இன்று அதிகாலை 3.30 மணிக்கு உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது, முள்ளிவாய்கால் நினைவுத் தூபி இடித்து அழிக்கப்பட்ட அதே இடத்தில் மீளவும் கட்டப்படும் என அவர் மாணவர்களுக்கு உறுதியளித்துள்ளார்.
அதனை தொடர்ந்து, உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்த மாணவர்களுக்கு துணைவேந்தர் முள்ளிவாய்கால் கஞ்சி கொடுத்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.
பின்னர், முள்ளிவாய்கால் நினைவுத் தூபியை மீண்டும் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, துணைவேந்தர் தலைமையில் மாணவர்களின் பங்குபற்றலோடு இடம்பெற்றதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.
-யாழ். நிருபர் பிரதீபன்-
தமிழ் முஸ்லிம் மக்கள் ஒன்றுபட்டோம் இனி வாழ்வு
ReplyDelete