ஜனாதிபதியின் உரையினால் எனக்கு அச்சுறுத்தல் - பொலிஸ்மா அதிபருக்கு ஹரீன் கடிதம்
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அம்பாறையில் ஆற்றியுள்ள உரை மூலம் தனக்கு உயிர் அச்சுறுத்தலை விடுத்துள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
பொலிஸ்மா அதிபருக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நேற்று -09- நான் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அம்பாறையில் ஆற்றிய உரையின் வீடியோக்களை பார்த்தேன், ஜனாதிபதி எனது பெயரையும் எனது நாடாளுமன்ற உரைகளையும் குறிப்பிட்டுள்ளார், நான் அவரது முதல் பெயரை குறிப்பிட்டதை சுட்டிககாட்டியுள்ளார் என ஹரீன் பெர்ணான்டோ இந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தனக்குள்ளே ஆபத்தான மனிதனும் அமைதியான மனிதனும் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார் என தெரிவித்துள்ள ஹரீன் பெர்ணான்டோ தன்னால் தான் பாதுகாப்பு செயலளாராகயிருந்தவேளை காணப்பட்ட திரும்ப முடியும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நான் ஒருபோதும் பயங்கரவாதிகளுடன் தொடர்புகளை பேணியதில்லை தமிழ் மக்கள் வாக்களிக்காமல் தடுப்பதற்கான பயங்கரவாதிகளிற்கு இலஞ்சம் வழங்கியதில்லை என்பதை நான் அவருக்கு நினைவுபடுத்தவேண்டும் என ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
உலகில் உயிர்வாழ்ந்த எவரையும் விட, அதிக பொலிஸ்காரர்களை கொலை செய்த கருணாவை நான் அரவணைக்கவில்லை என தெரிவித்துள்ள ஹரீன்பெர்ணான்டோ இவையனைத்துக்கும் அப்பால் நான் இலங்கையின் பிரஜையாக மாத்திரமிருந்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.
தனக்கு பிடிக்காத விடயங்களை நான் தொடர்ந்தும் தெரிவித்தால் என்னை நாய்போல தன்னால் கொலை செய்யமுடியும் என்பதை தனது உரையில் வலியுறுத்தியுள்ளார் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார் என ஹரீன் பெர்ணாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே அவர் தனது கடமைகளை நிறைவேற்ற தவறும்வரை அவருக்கு பிடிக்காத விடயங்களை தெரிவிப்பதன் மூலம் நான் எனது கடமையை செய்யவேண்டும் என தெரிவித்துள்ள ஹரீன் பெர்ணான்டோ எனது உயிருக்கு எவ்வளவு ஆபத்திலிருந்தாலும் நான் அதனை செய்யவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியும் முப்படை தளபதியுமாக உள்ள நந்தசேன கோத்தபாய ராஜபக்ச விடுத்துள்ள பாரதூரமான எச்சரிக்கையை கருத்தில் கொள்ளும்போது அவர் எனக்கு தீங்கிழைப்பது குறித்து தெரிவிக்கின்றாரா என்பது குறித்து சந்தேகப்படுவதற்கான காரணங்கள் உள்ளன என்பதை நான் உங்களிற்கு தெரிவிக்க விரும்புகின்றேன் என ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி பாதுகாப்பு செயலாளராக பணியாற்றியவேளை அவரை விமர்சித்த பத்திரிகையாளர்கள் மனித உரிமை ஆர்வலர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் காணாமல்போயுள்ளனர் அல்லது கொல்லப்பட்டுள்ளனர் என்பதை நான் அறிந்துவைத்துள்ளேன் என ஹரீன்பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் அதற்கு முன்பாக ஜனாதிபதி உட்பட அதிகாரிகளினால் அச்சுறுத்தல்களையும் நீதிமன்ற நடவடிக்கைகளையும் எதிர்கொண்டனர் என ஹரீன்பெர்ணான்டோ நினைவுபடுத்தியுள்ளார்.
Post a Comment