வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் மீது, கவனம் செலுத்தக்கோரி ஆர்ப்பாட்டம்
ஐக்கிய மக்கள் சக்தி இன்று (ஜன. 07) மாலை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் முன் வெளிநாட்டில் உள்ள இலங்கை சமூகத்தின் மீது கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர்களின் பாதுகாப்பு மற்றும் திருப்பி அனுப்பப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரி ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியது.
இந்த போராட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச,மக்கள் பிரதிநிதிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நாட்டிற்கு அந்நிய செலாவணியைக் கொண்டுவரும் இலங்கையர்கள் தேர்தலுக்கு முன்னர் 'நாட்டு வீராங்கனைகள்' என்று அழைக்கப்பட்டனர், ஆனால் இன்று அரசாங்கம் வெளிநாட்டில் அவர்கள் எதிர் நோக்கும் துன்பத்தை கண்டும் காணமலும் இருந்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு தொழிலாளர்கள் ஒரு மாஃபியாவில் சிக்கியுள்ளதால் இந்த இழிவான செயல்முறையை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.
Post a Comment