பைடனின் வெற்றியை அங்கீகரித்தது அமெரிக்க நாடாளுமன்றம் - டிரம்பின் அத்தனை திட்டங்களும் சுக்குநூறாகியது
அமெரிக்க நாடாளுமன்றம், ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரித்துள்ளது.
வாக்கு எண்ணிக்கை மூலம் அது உறுதி செய்யப்பட்டதாக துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் அறிவித்தார்.
இதனையடுத்து, இம்மாதம் 20ஆம் திகதி பைடன், அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்க முடியும்.
நேற்று, பைடனின் வெற்றி உறுதிசெய்யப்படுவதை எதிர்த்து, ட்ரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்றக் கட்டடத்தில் ஆர்பாட்டம் நடத்தினர். ஒரு கட்டத்தில் அது கலகமாக உருவெடுத்தது.
பின்னர் நடத்தப்பட்ட வாக்கு எண்ணிக்கையில், பைடனின் வெற்றி உறுதி செய்யப்பட்டது.
Congratulations...
ReplyDeleteCongratulations... Kindly don't DESTROY any Muslim countries in your period....
ReplyDelete