அடக்குவதா..? எரிப்பதா..?? எதிலும் அரசியல்வாதிகள் தலையிட முடியாது என்கிறார் லன்சா
“கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணிப்போரின் சடலங்களை தகனம் செய்வதா, அல்லது அடக்கம் செய்வதா? என்பது தொடர்பில், ஆராய்ந்து அறிக்கையிட்டிருக்கும் விசேட நிபுணர் குழுவின் அறிக்கையில், அரசியல்வாதிகள் தலையிட முடியாது” என, கிராமிய வீதிகள் மற்றும் பிற உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார்.
காலி மாவட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி குழுக் கூட்டம், நேற்று (10) நடைபெற்றது. அக்கூட்டம் நிறைவடைந்ததன் பின்னர், ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,
விசேட நிபுணர் குழுவின் அறிக்கையிலுள்ள பரிந்துரைகளுக்கு, நாங்கள் இணங்குகின்றோம் எனத் தெரிவித்துள்ள அவர், அந்தத் தீர்மானத்தில் அரசியல்வாதிகள் தலையிடக் கூடாது என்றார்.
Post a Comment