ஈஸ்டர் தாக்குதல் - மைத்திரிபாலவுக்கு எதிராக வழக்கு தொடர முடியாதா..?
ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பில், மைத்திரி குணரத்னவே ஆஜராகி வருகிறார்.
இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள மைத்திரி குணரத்ன, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் அளித்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் தான் அவற்றை செவிமடுத்ததாகவும் இதனடிப்படையில் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்க எந்த அடிப்படைகளும் கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் குறித்து முன்கூட்டியே கிடைத்த தகவலை முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கவில்லை என்பதை முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஏற்றுக்கொண்டுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளரும், இது பற்றி அறிந்திருந்த தகவல்களை முன்னாள் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தவில்லை.
ஈஸ்டர் தாக்குதல் நடந்த காலப் பகுதியில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோருடன் முன்னாள் ஜனாதிபதி கோபத்தில் இருந்த காரணத்தினாலும் முன்னாள் ஜனாதிபதி அவர்களை தொடர்ந்தும் விமர்சித்து வந்ததாலும் அவர்களால் தகவல்களை வழங்க முடியாமல் போனது என்ற குற்றச்சாட்டை மைத்திரி குணரத்ன மறுத்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் நடப்பதற்கு முன்னர் சித்திரை புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பதற்காக இவர்கள் இவரும் முன்னாள் ஜனாதிபதியை சந்திக்க சென்றிருந்தனர் எனவும் கோபம் இருந்தால், அவர்கள் முன்னாள் ஜனாதிபதியை சந்திப்பதற்கான வாய்ப்பு இருந்திருக்காது எனவும் குணரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment