புதிய கொரோனாவினால் இலங்கைக்கு உடனடி அச்சுறுத்தல் இல்லை, மக்கள் அமைதியாக இருப்பது அவசியம்
'அந்த வைரஸ் மாறியைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. ஆகையால், பொதுமக்கள் அமைதியாக இருக்கவேண்டியது அவசியமாகின்றது' எனப் பொதுச் சுகாதார சேவைகளின் துணை பணிப்பாளர் ஜெனரல் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
இங்கிலாந்தில் இருந்து வந்த நபர், புதிய வகை தொற்றுக்கு இலக்காகி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் போதே, அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவிட்டன என்றும் மரபணு வரிசைப்படுத்தலின் விளைவாகவே, அந்நபரின் புதிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
புதிய வைரஸ் சமூகத்துக்குள் நுழைவதைத் தடுக்க. இலங்கையின் சுகாதார வழிகாட்டல்களைக் கண்டிப்பாக அமுல்படுத்தப்படும் என்றும் தற்போது சுகாதார அதிகாரிகள் பின்பற்றும் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தும் பணியில் எந்த மாற்றமும் இல்லை என்றும், சுகாதார அமைச்சரின் தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர் தெரிவித்தார்.
Post a Comment