வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை அழைத்துவரும் விமானங்களை அதிகரிக்க நடவடிக்கை - மேலதிக கட்டணம் செலுத்த தேவை இல்லை
வெளிநாடுகளிலுள்ள இலங்கைப் பணியாளர்களை அழைத்து வருவதற்கான விமானங்களின் எண்ணிக்கை அடுத்த வாரத்திலிருந்து அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் வலைத்தளத்திலேயே அமைச்சர் நாமல் ராஜபக்ஸ இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
அத்துடன், இவ்வாறு வருகைத் தரும் பணியாளர்கள் அனைவரையும் அரசாங்கத்தின் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்துவதற்கான வசதிகள் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் வெளிநாட்டிலுள்ள இலங்கைப் பணியாளர்கள், இலங்கைக்கு வருகைத் தந்ததன் பின்னர், மேலதிக கட்டணங்களை செலுத்தி, சுய தனிமைப்படுத்துவதற்கான எவ்வித தேவையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
Post a Comment