Header Ads



தொடரும் ஜனாஸா எரிப்பு, காரணம் எதுவாக இருக்கும்..? விடாப்பிடி தளராமல் இருப்பது ஏன்..??

- அய்யாஷ் -

சர்வேதேச அழுத்தங்கள் , ஆர்ப்பாட்டங்கள், நிர்பந்தங்கள், உருக்கமான வேண்டுகோல்கள், காலில் விழாத குறையான கெஞ்சல்கள், கதறல்கள், எதுக்குமே அரசாங்கம் அசைவது போல தெரியவில்லை.

முள்ளிவாக்கால் படுகொலை சர்வதேச அரங்கில் படித்துகொடுத்த பாடத்தை அரசாங்கம் கட்சிதமாக இதில் பயன் படுத்திக்கொண்டு இருக்கிறது.

சீனாவின் சேலை நுனியை கவ்விக்கொண்டு இருக்கும் வரை எந்த சக்திக்கும் அஞ்ச வேண்டியதில்லை என்பது இலங்கை அரசின் அசைக்க முடியாத நம்பிக்கை. 

நம்மிடையே உள்ள விரக்தியை வெளிப்படுத்த, நமக்குள் உள்ள இயலாமையை மறக்க அல்லது மறுக்க நமக்குள் இருப்பவர்கள் மீது, நமது மென்மையான இலக்குகள் மீது குறி பார்த்து அடிக்கடி வெறும் துப்பாக்கியால் சுட்டுகொண்டு இருக்கிறோம். அரசியல் வாதிகள், மார்க்கத்தலைவர்கள், வாழ்க்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் ஏன் சோஷல் மீடியா பதிவுகளை கூற குற்றம் சாட்டி மனநிறைவு அடைய பழகிவிட்டோம்.

கேக்கின் மேல் ஐசிங் போடுவது போல இலக்குவானதுதான் இந்த இம்மை வாழ்க்கையா? சிரியாவில் யெமனில், பலஸ்தீனத்தில், காஷ்மிரில் சோமாலியாவில் நடக்கிற துன்பத்தின் துளியை கூட நாம் அனுபவிக்கவில்லை.

சொர்க்கத்துக்கு ஓபன் விஷா இலகுவாக கிடைக்கும் என்பது நமது நம்பிக்கையா?

நமக்கு ஏன் இவ்வாறான நெருக்கடி ஏற்பட்டுள்ளது?

அல்லாஹ்வே இறுதி தீர்ப்பளான்.. அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன் இருந்தும் வரலாற்று பாடத்தை வைத்து மார்க்க அடிப்படையில் சிலவற்றை அநுமானிக்க முடிகிறது.

◼️ஜனாஸா எரிப்பானது அல்லாஹ்வோடு உள்ள நெருக்கத்தை அதிகமாக்க அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட விடயமாக இருக்கலாம்

◼️நமது தவறுகளுக்காக /பாவங்களுக்காக அவற்றை மாற்றிக்கொள்ள நம் மீது அனுப்பட்ட சோதனையாக இருக்கலாம்

◼️நமது நிலைமையை மாற்றி மார்க்கதோடு உள்ள தொடர்பை அதிகரிக்க, நமது நல்லமல்களை அதிகரிக்க அல்லாஹ்வினால் அனுப்பட்டதாக இருக்கலாம்

◼️நமது வாழ்க்கை மார்க்கத்துக்கு முரண் பாடாக ஹராமோடு ஒன்றி உள்ளதால் துஆக்கள் அங்கீகரிக்கப்படாமல் இருக்கலாம். நமது பிரார்த்தனைகள் பதில் அளிக்கப்படாமல் இருக்கலாம்.

◼️ஜமாஅத்துக்கள், பிரேதேசவாதம் என்பன நமது உள்ளத்தில் புரையோடிப்போய் உள்ள நிலையில் நம்மை ஒற்றுமைப்படுத்துவத்தைற்கான அல்லாஹ்வின் ஏற்பாடக இருக்கலாம்.

◼️இஸ்லாத்தில் வெறுக்கப்பட்ட, ஜாஹிலிய பண்பான தேசியவாத்தை நமது நமது மனதிலும், பள்ளிகளிலும், மார்க்க தலைவர்களின் உள்ளங்களிலும் இருந்து வெளியேற்றும் அல்லாஹ்வின் ஏற்பாடக இருக்கலாம்.

◼️உலகம் முழுவதும் அல்லாஹ்வின் பாதையில் போராடிக்கொண்டு இருக்கும் நிலையில் பீசபீல் பாதைக்கு நம்மை தூண்டுவதற்கான அல்லாஹ்வின் ஏற்பாடக இருக்கலாம்

அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்

ஒன்று மட்டும் உண்மை

நம்மை மாற்றாத வரை நம் நிலைமையை அல்லாஹு தஆலா மாற்ற மாட்டான்.

4 comments:

  1. jamiyathul ulama should take over muslim political system,

    all muslim political party should dismiss,

    while election time suitable person should select

    each muslim house should takleem discussion(buildup eeman)
    fake thwheed jammath should dismiss
    conveay islam on non muslim
    now most shinkal people dont know islam, publish shinkala book about allah ,mohamad prophet
    convay falut buddishm , what is say about god , who is budda different islam


    ReplyDelete
  2. அல்ஹம்துலில்லாஹ்

    ReplyDelete
  3. இருக்கலாம்.......அவ்வளவுதான்........பாவம் நீங்களும் நானும்.

    ReplyDelete

Powered by Blogger.