Header Ads



பிரதமருக்கு எந்த பாதிப்பும் இல்லை, நலமாக இருக்கிறார் - மகன் யோஷித்த தெரிவிப்பு


பிரதமர் மகிந்த ராஜபக்சவின் அரசியல் விவகாரம் தொடர்பான ஒருங்கிணைப்புச் செயலாளர் குமாரசிறி ஹெட்டிகே கொரோனா தொற்றாளர் என கண்டறியப்பட்டுள்ள நிலைமையில், பிரதமருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என பிரதமர் செயலகத்தின் தலைமை அதிகாரி யோஷித்த ராஜபக்ச உறுதிப்படுத்தியுள்ளார்.

கொரோனா தொற்றாளர் என கண்டறியப்பட்டுள்ள குமாரசிறி ஹெட்டிகே, பிரதமரை இறுதியாக 10 தினங்களுக்கு முன்னரே சந்தித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

ஹெட்டிகேவுடன் நெருங்கி செயற்பட்ட பிரதமர் செயலகத்தின் மூன்று அதிகாரிகள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களும் பிரதமருடன் நெருங்கி பணியாற்றவில்லை எனவும் யோஷித்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளளார்.

அத்துடன் ஹெட்டிகேவுக்கு அலரி மாளிகையில் அலுவலகம் இல்லை. பிரதமரின் ஊழியர்கள் குழுவில் பணியாற்றும் நபர்களுக்கு வாராந்தம் PCR பரிசோதனை நடத்தப்பட்டு, கடும் சுகாதார சட்டத்திட்டங்களுக்கு உட்படுத்தப்பட்டிருந்தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.