Header Ads



நிபா வைரஸ் குறித்து, இலங்கை கூடுதல் அவதானம்


இலங்கையில் கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்தவும் வைரஸின் பிறழ்ந்த பாதிப்புகளைக் கண்டறியவும் நடவடிக்கை எடுக்கும் அதேநேரத்தில், இலங்கையில் நிபா வைரஸ் உள்ளிட்ட  பிராந்தியத்தில் பரவும் பிற வைரஸ்களை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

மற்றைய சில நாடுகளிழல், நிபா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளது என, பொது சுகாதார சேவைகளின் துணைப் பணிப்பாளர் ஜெனரல் டொக்டர் ஹேமாந்த ஹேராத் தெரிவித்தார்.

இருப்பினும். கடுமையான நடவடிக்கை எடுக்க, இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பில் இருந்து எந்தப் பரிந்துரையும் இதுவரை கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

எனினும் இது தொடர்பாக சுகாதார அதிகாரிகள் கண்காணித்துக் கொண்டு. இருக்கின்றனர் என்றும் அவர் கூறினார். அத்துடன், இந்த வைரஸ் தொடர்பான தகவல்களை, உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கைக்கு வழங்கும் என்றும் அவர் கூறினார்.

1 comment:

  1. You are waiting for WHO recommendation? If you people agree and abide by WHO regulation... Why do you forcefully cremate Muslims covid dead bodies ?

    ReplyDelete

Powered by Blogger.