Header Ads



'கொரோனா' இன்னும் சமூகத்தில் அதிகம் வியாபிக்கவில்லை - 5 சதவீதத்தை கடந்தாலே சமூகப் பரவலாக கருதமுடியும்


கொரோனா வைரஸ் பரவலானது இன்னும் சமூகத்தில் அதிகம் வியாபிக்கவில்லை என, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் பிசிஆர் பரிசோதனைகளுக்கு அமைய, 3.5 தொடக்கம் 4 சதவீதமானோரே தொற்றாளர்களாக அடையாளம் காணப்படுகின்றனர் என, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

எனவே, 5 சதவீதத்தை கடக்கும் பட்சத்திலேயே சமூகப் பரவல் ஏற்பட்டுள்ளதாக கருத முடியும் என அவர் தெரிவித்துள்ளார். 

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். 

1 comment:

  1. இந்த மேதாவிகள் ஒருநாளைக்கு ஒரு கருத்தும் அடுத்த நாள் அதற்கு முரணாகச் சொல்லும் போது பொதுமக்கள் எதனைப்பின்பற்ற வேண்டும் என யாரும் அறிவுரை கூறுவதில்லை. அப்படியானால் வாயில் வந்ததெல்லாம் இந்த விசேட பிரிவினர் கூறும் போது சாதாரண பொதுமக்களின் நிலைப்பாடு என்ன?

    ReplyDelete

Powered by Blogger.