ஜனாஸா விவகாரத்தில் 2 பெண் அமைச்சர்களும் மாறுபட்ட நிலைப்பாட்டை கொண்டுள்ளனர்
கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை கையாளும் விவகாரத்தில், அரசாங்கத்திற்குள்ளேயே மாறுபட்ட கருத்துக்கள் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகின்றன- இரண்டு பெண் அமைச்சர்களும் மாறுபட்ட நிலைப்பாட்டை கொண்டுள்ளனர் என்பது அவர்களது அறிக்கைகள் மூலம் தெளிவாகியுள்ளது.
நிபுணர் குழு உடல்களை அடக்கமும் செய்யலாம் என தெரிவித்திருந்தாக தகவல்கள் வெளியான நிலையில், உடல்களை தகனம் செய்வதில் மாற்றம் இல்லை என சுகாதார அமைச்சர் இன்று அறிவித்துள்ளார்.
கருத்துப்படம் : ஆர்.சுரேன்
ஜனாஸாக்கள் எரிப்பு விவகாரம் நாட்டு மக்களை ஆட்கொண்டுள்ள பொருட்கள் விலையேற்றம், அரசியல் அநீதிகளை மூடி மறைக்க ஆடப்படும் ஓர் நீண்ட கதா பாத்திரம். முதல் பாத்திரம்: ஒரே நாடு ஒரே சட்ட பிரச்சாரம். இரண்டாவது பாத்திரம்: மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு. மூன்றாவது பாத்திரம்: ஆராய குழுக்கள் நியமித்தல். நான்காவது பாத்திரம்: Cooler, Freezer களில் ஜனாஸாக்களை வைக்கச் சொல்லி (நல்ல முடிவொன்றுக்கு வரப் போகின்றனர் என்ற ஒரு மாயை முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தி) ஏமாற்றுதல்.ஐந்தாவது பாத்திரம்: அரசாங்கத்தின் முடிவில் மாற்றமில்லை என (இனவாதக் காவிகளைத் திருப்தப்படுத்தி) அறிவித்தல். ஏமாறுவோர் இருக்கும் வரை ஏமாற்றுபவனும் இருப்பான்.
ReplyDelete