Header Ads



மதரஸாக்கள் மூலம் இனவெறியைத் தூண்டிய குற்றத்திற்காக 246 பேர் தொடர்பில் விசாரணை - ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை 31 இல் வெளியாகும்


உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபட்ட 32 பேர் மீது காவல்துறையினர் விசாரணைகளை முடித்துள்ளனர்,அத்துடன் அவர்கள் மீது வழக்குகளை பதிவு செய்வதற்காக எட்டு ஆவணங்கள் சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணையத்தின் அறிக்கையைப் பெற்ற பின்னர் கொலை மற்றும் காயங்களை ஏற்படுத்தியது ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பில் சட்டமா அதிபர் வழக்குகளை தாக்கல் செய்வார் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை இந்த ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதி வெளியிடப்படும், அறிக்கை வெளியானவுடன் விரைவில் வழக்குகள் தாக்கல் செய்யப்படும் என்றும் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை மதரஸாக்கள் மூலம் ஆயுதங்களை வழங்குதல், பயிற்சி அளித்தல் மற்றும் இனவெறியைத் தூண்டுதல் ஆகிய குற்றங்கள் தொடர்பாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அல்லது சிறையில் அடைக்கப்பட்டுள்ள 246 பேர் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

4 comments:

  1. Appa unga terokkal VVIPs now? you and your cooperated people, they never do any racism? your side they never killed innocent people? and can u show us who has planned this easter blast and put on Muslims shoulder?

    ReplyDelete
  2. Please dont publish this 2nd trump news here

    ReplyDelete
  3. மதரஸாக்கள் இனவெறியை தூண்டியதா? என்ன ஆச்சரியம்.

    அப்போ பகிரங்கமாக நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக பேசப்படும் வன்மமான பேச்சுக்கள், ஊடகங்கள் தொடர்பாக என்ன செய்வார்களோ?

    ReplyDelete

Powered by Blogger.