Header Ads



காத்தான்குடிக்கான தனிமைப்படுத்தல் 18 ஆம் திகதிவரை மீண்டும் நீட்டிப்பு


காத்தான்குடி பொலிஸ் பிரதேசத்தில் தற்போது அமுலில் இருக்கும் தனிமைப்படுத்தல் சட்டம், எதிர்வரும் திங்கட்கிழமை 18ஆம் திகதி வரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.லதாகரன் தெரிவித்தார்.

டிசெம்பர் 31ஆம் திகதி அமுலுக்கு வந்த காத்தான்குடி பிரதேச தனிமைப்படுத்தல் சட்டம், நாளை 15ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்தது. எனினும், எதிர்வரும 18ஆம் திகதியே குறித்த தனிமைப்படுத்தல் சட்டம் நீக்கம் தொட்ர்பாக முடிவு செய்யபபடுமென அவர் மேலும் தெரிவித்தார்.

இப்பிரதேசத்தில் தொடர்ச்சியாக அன்டிஜன் மற்றும் பி.சிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தினமும் 100 முதல் 150 பேருக்கு இப்பரிசோதனைகள் நடைபெறுவதாகவும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

ரீ.எல்.ஜவ்பர்கான், எம்.எஸ்.எம்.நூர்தீன், கனகராசா சரவணன்


No comments

Powered by Blogger.